பக்கம்:மனிதர்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 தேரி என்றால் மேடு என்று அர்த்தம். மலை மேலே உள்ள எஸ்டேட் கட்டிடங்கள் கட்டுவதற்கு அந்த இடத் திலேதான் மண் எடுத்து செங்கல் சூளை போட்டு, செங்கல் தயாரிச்சாங்க. அதுனாலே அந்த மேட்டு நிலத் துக்கு செங்கல் தேரியின்னு பேரு ஏற்பட்டது. அங்கே இருக்கிற பங்களா வெள்ளைக்காரங்க காலத்திலே கட்டப் பட்டது. மலை மேலே காடுகள் எஸ்டேட்டுகளை பரிசோ திக்க வெள்ளைக்கார ஆபீசருகவருவாங்க. - மலைகள், கடல்கள் என்றாலே ரொம்டப் இடத்திலே தோற்றமும் கிளை மேட்டும் கொடைக்கானல் மாதிரி இருக்கும். ஆகவே இங்கே நாலைஞ்சு நாள் தங்கிப் போகலாமே என்கிற ஆசையோடு அவங்க அருமையான இடத்திலே வசதியாக பங்கனா கட்டி வச்சாங்க, இப்போ තු -* அதுபெரும்பாலான நாட்கள் அடைச்சே கிடக்குது. எப்பவா வது மலைமேலே ஏறி வரக்கூடிய யாராவது பங்களாவிலே தங்க வேணுமின்னா, கீழே உள்ள வனத்துறை அலுவலகத் தில் பணம் கட்டி, அனுமதி பெற்று, சாவியும் வாங்கிக் கொண்டு வரணும். நாம அப்படி வாங்கி வந்திருக்கோம். இருந்தாலும், அங்கே போக முடியாமல், திறந்த வெளியிலே குளிரிலே கிடந்து அவஸ்தைப் படனுமின்னு ஆயிட்டுது 1 * * எல்லாம் காலம் செய்கிற வேலை! ஒரு ம. திரியாக அவர் பேச்சை நிற்பாட்டியதும், ஆகுளிருக்குப் பாதுகாப்பா தீ மூட்டிக்கிட்டா போச்சு!". என்று கூறி, சுற்றி வரக் குவிக்கப்பட்ட சருகுகள் சுள்ளி களில் நெருப்பு வைத்தார் அண்ணாச்சி. தீ சிறுகச் சிறுகப் பற்றியது. அனைந்து விடுவதுபோல் பம்மி, குபிரென்று எவ்விப்படர்ந்தது. புகைக்கக்கியது. ஒளி நாக்குகள் நீட்டி நர்தன மிட்டது. அகப்பட்டதை நக்கி வலிமை பெற்றது. அங்கும் இங்குமாய் தாவிக் குதித்து நெடுகிலும் பாய்ந்து பரவியது. செம்மையாய் சிரித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/91&oldid=855629" இலிருந்து மீள்விக்கப்பட்டது