பக்கம்:மனிதர்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9獻 மேட்டின் மீதிருந்த மனிதர்களுக்கு உஷ்ணமும் தைரிய மும் அளிக்கும் ஒளி வளையமாக தீ வட்டமிட்டு மிளிர்ந்து எரிந்துகொண்டிருந்தது.

  • இப்படி எவ்வளவு நேரம் எரியும்? மேலும் மேலும் தி எரிவதற்குத் தேவைப்படும் கட்டைகள் நம்மிட இல்லையே!' என்று வருத்தப்பட்டார் ஒருவர்.

எரிகிறவரை எரியட்டுமே, இப்பவே நாம் ஏன் வீணாகக் கவலைப் படனும்?' என்று அண்ணாச்சி சொல்லி வைத்தார். நேரம் ஊர்ந்துகொண்டிருந்தது. டீ அல்லது காப்பி தயாரித்துக் குடித்தால் இந்த நேரத்துக்கு உற்சாகமாக இருக்கும்' என்று ஒருவர் அபிப் பிராயப் பட்டார். தயாரிக்கலாமே!’ என்ற அண்ணாச்சி, சமையல் நிபுணரை ஏவுவதில் உற்சாகம் காட்டினார். சுக்கு வெந்நீர்தான் ஜோராக இருக்கும்' என்று வேறொருவர் திருத்தம் கொண்டு வந்தார்.

  • கடுங்காப்பி (பால்சேராத கறுப்புக் காப்பி)யே. போதும் என்று மெஜாரிட்டி தீர்மானித்தது.

அது செயலில் நிறைவேறியது. துரங்கிக் கிடந்த தூக்கப்பிரியர்கூட காப்பி என்ற பேச்சினாலும், அதன் நறுமனத்தினாலும் தாக்கப்பெற்று விழிப்படைந்தார். தமது பங்குக் காப்பியை இழந்துவிட அவர் தயாராக இல்லை. அவரை பரிகசித்து, உரக்கக் சிரித்து உள்ளாசமாகப் பொழுது போக்கிய வேலையில்தான் அவர்களதுகவனம்ஈர்க் கப்பட்டது. எவரேனும் ஒருவரது ஜாக்கிரதை உணர்ச்சியா லோநெருங்கி வந்த ஆபத்து பலரது உடலில் உள்ளூர ஏற். படுத்திய ஒருவித உணர்வினாலோ, அது தெரிய நேர்ந்திருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/92&oldid=855630" இலிருந்து மீள்விக்கப்பட்டது