பக்கம்:மனிதர்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 இந்தப் புலி ஒண்னும் பண்ணாது. பொதுவா, புலிகள் எதையும் அடித்துக் கொன்று உடனடியாகத் தின்ப தில்லை. கொல்லப்பட்டதை இழுத்துக் கொண்டு போய் ஒரு இடத்தில் வைக்கும். அந்தச் செத்ததின் இறைச்சியை பிறகு சாவகாசமாய்த் தின்னும், அந்த இறைச்சியில் புழு, கிருமிகள் உண்டாகிவிடுவதும் உண்டு. அப்படித் தின்கிற இறைச்சி புவியின் பற்களில்-இடை வெளிகளில்... புகுந்து தங்கியிருக்கும். அவற்றில் புழு பூச்சிகள் மிகும். அவை புவிக்கு வேதனை தரும். அந்த நோவு தீர்வதற்தாக புலி நெருப்பு முன் நின்று வாயைப் பிளக்கும். சூடு இதமாக இருக்கும். அது மட்டுமல்ல, அந்தச் சூடு பட்டுப் புழு பூச்சிகள் செத்துப் போவதும் உண்டு. மிருகங்கள் தாமாகவே உணர்ந்து வைத்திருக்கிற இயற்கை வைத்தியம் இது. தப் புலியும் பல்வலியால் ரொம்பவும் சங்கடப் படுவதாகத் தெரிகிறது. அதற்கு சிகிச்சை பெறத்தான் தீயை தேடி வந்திருக்கிறது.' 3.9 இருக்கலாம். ஆனாலும் நமக்கு பயமா இருக்குதே! என்றார் ஒருவர். பலருக்கும் நடுக்கம்தான். புலியின் உருவமும், அதன் பயங்கர முகமும், கண்களும் பற்களும் பார்த்து ரசிக்கப்பட வேண்டியனவாய் தோன்ற வில்லை அங்கே இருந்தவர்களுக்கு. அது என்ன செய்யுமோ? தீ அணையத் தொடங்கினால், புலி தாவி வந்து தாக்கக் கூடுமே! தீ எவ்வளவு நேரம் எரிந்து கொண்டிருக்கும்:நெஞ்சில் பயிராகிவிட்ட பயத்தை வளர்க்கும் சத்துக்களால் எத்தனையோ ஐயப்பாடுகள்! அண்ணாச்சி துணிந்து ஒரு காரியம் செய்தார். எரிந்து கொண்டிருக்கும் கொம்பு ஒன்றை உருவி எடுத்து புலியை நோக்கி விட்டெறிந்தார். அவரைப் பின்பற்றி மற்றும் சிலரும் தீக் கொம்புகளை வினோர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/94&oldid=855633" இலிருந்து மீள்விக்கப்பட்டது