பக்கம்:மனிதர்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g 7 ஆம்பிளைக பொம்பிளைக அறியாப் புள்ளைகள்ளாம் கண்ணு மண்ணு தெரியாம திக்குத் திசை புரியாம திண்டாடித் தவிச்சாங்க. புகை மண்டிப் பரவியதே தீ எவ்வி எவ்வித் துள்ளியதே... போதும் போதும். காதல் பாட்டா ஏதாவது சொல்லு" என்று ராமையா டைரக்ட் பண்ணினார். சின்னஞ் சிறுத்த புள்னெ சிங்காரமான புள்ளெ அலங்கரிச்ச தேருபோல அசைந்து வரும் சிவத்தப் புள்ளெ மின்னலடிச்சதுபோல் சிகிச்சாளே என்னைப் பார்த்து. கறுப்பசாமி குவியாகப் பாடினான். பார்த்திமா புலவர் திறமையை எப்டி, எப்டின்னேன்" என்று ஜாலி பண்ணினார் ராமையா. புலவருக்கு உச்சி குளிர்ந்தது. உற்சாகத்தோடு, மேலே மேலே பாட்டுகளை உலுப்பித் தள்ளினார். வாய்க்காங் கரையோரம் அரளிப்பூ சிரிச்சதுபோல் குலுங்கிச் சிரித்தாளே குமரிப்பொண்ணு தங்கம்மா. போதும் புலவர். நீ போயி வேலையைப் பாரு’ என்று ராமையா அவனை அனுப்பி வைத்தார், இதைப் பத்தி நீங்க என்ன நெனைக்கீக?' என்று நண்பரைக் கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/99&oldid=855642" இலிருந்து மீள்விக்கப்பட்டது