பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி


"பாருங்கள் மாமா! வீட்டிற்குள் வந்தால் தினம் இதே பாட்டுதான். காக்கையாய் கத்தி கரையானாய் அரித்து, கல்யாணம் என்று என்னைப் போட்டுத் தொந்தரவு செய்தால், நான் எப்படி நிம்மதியாக வாழ முடியும்? எனக்கு வீட்டிற்குள் வரவே பிடிக்கவில்லை. வெளியே ஒடிப்போகவும் வழியில்லை. நீங்கள் ஊருக்குப் போவதற்குள், இதற்கொரு முடிவு செய்துவிட்டுப் போனால், உங்களை என் உயிர் உள்ளளவும் மறக்கமாட்டேன்" என்று கையெடுத்துக் கும்பிட்டான் வாசு.

இவ்வளவு விநயமாக கும்பிடும் வாசுவைப் பார்த்து, உலகநாதர் மனம் நெகிழ்ந்து போனார். தன் தங்கை தேவைக்கு அதிகமாகவே வாசுவை வற்புறுத்தியிருக்கிறாள், வருத்தப்படுத்தியிருக்கிறாள் என்பதையும் நன்கு புரிந்து கொண்டார். அவளுக்கு அவன் ஒரே மகன் தானே! ஆதங்கம் இருக்காதா?

வாசுவின் மன நிலையைப் புரிந்து கொண்டால்தான், மேற்கொண்டு பேசமுடியும் என்று தனக்குள்ளே சிந்தனையில் ஆழ்ந்து போனாள் உலகநாதர்.

என்ன மாமா? நான் கேட்கிறேன்! நீங்கள் பேசாமல் இருக்கிறீர்களே? எனக்கு எப்படி உதவப் போகிறீர்கள் என்று பரிதாபமாகக் கேட்டான் வாசு.

நீ சொல்வது தான் சரி. உனக்குக் கல்யாணம் செய்து கொள்ள விருப்பம் இல்லையென்றால், பிடிக்கவில்லையென்றால் நான் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். நீதான் காரணமில்லாமல் எதுவும் பேசமாட்டாயே?

ஆமாம் மாமா ! எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கவில்லைதான். கல்யாணம் செய்து கொள்ளாமல்