பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழந்தவர்கள், கல்யாணம் ஆன சில நாட்களுக்குள்ளே ஆளே மாறி, களையிழந்து, கண்குழி விழுந்து, கன்னங்கள் ஒட்டி, நடை தடுமாறி நடமாடுகின்றார்களே? இதற்கென்ன சொல்கிறீர்கள்" என்றான் வாசு.

உலகநாதர் பேசாமல் இருக்கவும், இது தான் சமயமென்று வாசு, மேலே தன் குற்றச் சாட்டைத் தொடர்ந்து கூறினான்.

அப்படியே, ஒருசில தம்பதிகள் தங்கள் உடலை அழகாக வைத்துக் கொண்டாலும், வீட்டுக்குள்ளே எப்பொழுது பார்த்தாலும் சண்டை போட்டுக் கொள்கிறாள்கள். மனதிலே சாந்தியில்லாமல் என் நண்பர்கள், மற்றும் தெரிந்தவர்கள் எல்லோரும் அவதிப்படுவதை நானே என் கண்களாலேயே பார்த்திருக்கிறேனே!

பெண்களால் தானே மாமா, இப்படிப் பிரச்சினைகள் மிகுதியாகின்றன! அவர்கள் மனதை அறிய முடியாது என்று பைபிளில் ஒரு உவமை வருகிறது. உங்களுக்கு தெரியுமா?

என்னப்பா அது?

"பாறையில் போகும் பாம்பின் பாதையை அறிந்து கொள்ளலாம். கடலில் போகின்ற கப்பலின் வழியைத் தெரிந்து கொள்ளலாம். வானில் பறக்கின்ற பறவையின் போக்கைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் ஒரு பெண்ணின் மனதைப் புரிந்து கொள்ளவே முடியாது". இப்படிக் கூறியிருப்பது உண்மை தானே மாமா?

அப்படிப்பட்ட பெண்ணை நன்றாகப் புரிந்து கொண்டு, 'பூலோக சொர்க்கம்' என்று பெண்களைப் போற்றியும் பாடியிருக்கிறார்களே புலவர்கள்! அதற்கென்ன நீ பதில் சொல்லப் போகிறாய்?