பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா

13

அவர்கள் தெரியாமல், பாடியிருக்கிறார்கள் மாமா! ஒரு வேளை, அவசரத்தில் கூட பாடியிருக்கலாம்!

இல்லை. அவர்கள் தெரிந்து தான் பாடியிருக்கிறார்கள். உள்ள பூர்வமாக உணர்ந்து உலகுக்குக் கூறியிருக்கிறார்கள் "பெண்ணை எவன் புரிந்து கொள்கிறானோ, அவன்தான் பேரின்பம் காண்கிறான்" என்ற முதுமொழி உனக்குத் தெரியுமா?

நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லையே! நிலைக் கண்ணாடியின் முன்னே நின்று கொண்டு, நாம் எப்படி பார்க்கிறோமோ, அப்படித்தான் நமது முகம் அதில் தெரியும். அது போலவே, நாம் பெண்ணை எவ்வாறு நோக்குகிறோமோ, அவ்வாறுதான் நமக்கும் நினைக்கத் தோன்றும்.

"பெண்னை நம்பாதே" என்று ஏன் பாடியிருக்கிறார்கள் என்றான் வாசு.

'உன்னையும் நம்பாதே' என்று கூடத் தான் பாடியிருக்கிறார்கள். 'உலகே மாயம் வாழ்வே மாயம்' என்றும் பாடவில்லையா? ஏன் தெரியுமா?

"மாயமான வாழ்வு தானே இது மண்பாண்டம் போன்றது தானே நம் உடல் அந்த மயக்கத்துடன் ஏன் போய் இந்த கல்யாண சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டும்" என்று எச்சரிக்கத்தான் அந்தப் பாட்டு என்றான் வாசு.

அப்படி இல்லை வாசு. 'நாளை நடப்பதை யாரறிவார்' என்ற நிலையில் தான் இந்த உலகம் இருக்கிறது. அதே நேரத்தில், உலகத்தில் இனிய வாழ்வும் ஏராளமாக அமைந்திருக்கிறது. அதற்குள்ளே, இந்த அற்புதமான பிறவியை ஆனந்தமாக வாழ்ந்துவிட வேண்டும்' என்று பிச்சரிக்கத் தான் இப்படி பாடியிருக்கின்றார்கள்.