உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி



ஆனந்தம் எப்படி வரும்? அதை அடைய வேறு வழியேயில்லையா? கல்யாணம் செய்து கொண்டால் தான் ஆனந்தம் கிடைக்குமா?

ஆமாம் கல்யாணம் என்றால் ஆணுக்குத் துணையாகப் பெண்ணும், பெண்ணுக்கு துணையாக ஆணும் இருந்து வாழ்வது. அதில் அனுதினம் பெறுவதான் ஆனந்தம்.

‘ஆதிகால மனிதனான ஆதாமுக்குத் துணையாகத் தானே ஏவாள் படைக்கப்பட்டாள்! அந்த ஏவாள் பேச்சைக் கேட்டதால்தானே இத்தனை துன்பமும்!’

‘நீ சரியாகப் புரியாமல் பேசுகிறாய்! ஆதாமுக்குத் துணையாகத் தானே ஏவாள் வந்தாள். துணையாக வந்தவளுடன் தொடர வேண்டியது தானே ஆதாம் தன் பயணத்தை, ஆதாம் என்ன செய்தான்? அவளை நம்பி, தனி சுய அறிவை இழந்தானே! இறைவன் எச்சரிக்கையையும் மீறி, அவன் பெண் பேச்சைக்கேட்டதால் தானே இன்பத்தை இழந்தான். வாழ்ந்த இடத்தை இழந்தான். எல்லாத் துன்பமும் பெறக் கூடிய வாழ்க்கையை அடைந்தான்.’

“இந்திரன் கெட்டதும் பெண்ணாலே, சந்திரன் கெட்டதும் பெண்ணாலே” என்று சரித்திரங்கள் கூறுகின்றனவே!

ஆணுக்குப் புலனடக்கம் இல்லை அதனால் வந்த வினை நடக்கும் போது தவறி கீழே விழுந்து விட்டு, நடந்த தரையின் மீது குற்றம் சொன்னால் எப்படி? பெண் தேவை தான். ஆனால் அந்தத் தேவையைத் தீர்த்துக்கொள்ளும் வழியில் தான் ஆளுக்குஆள், முறையும் வழியும் மாறுபடுகிறது.