பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

21


தன் மலர் போன்ற உடலை, மகிழ் வினை விரும்புகின்ற உள்ளத்தை, ஒப்பற்ற இன்பத்தை, இனம்புரியாத எதிர்காலத்தை, ஏற்றமிகு வாழ்வான அத்தனையையுமே மற்றவரிடம் தந்து, தைரியமாக ஒருவருடன் ஒருவர் சேர்ந்து வாழத் துடிக்கின்ற இரு உள்ளங்களின் இணைப்பே திருமணமாகும்.

முன்பின் தெரியாத ஒரு புதிய ஆணிடம் அல்லது புதிய பெண்ணிடம் தன்னையே ஒப்படைக்கக் கூடிய தைரியம் மட்டும் அங்கு இருக்கவில்லை. தான் இந்த உலகிலே வாழ்கின்ற இறுதிக்காலம் வரை, சேர்ந்து ஐக்கியமாக வாழவேண்டும் என்று வாழத் துடிக்கும் நம்பிக்கையின் பெருந்துணிவின் வைபோகமே திருமணம் ஆகும்.

இதற்கு ஒரு தைரியம், துணிவு வேண்டுமா? புதிராக இருக்கிறதே கேட்பதற்கு?

ஆமாம்! திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக, பெருந்தன்மையான துணிவுடன் வாழ்வின் சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொண்டு, எதையும் இணைந்தே முனைந்தே அனுபவிக்க விரும்பும் ஓர் இனிய கனவின் இயல்பான நினைவின் இதமான முன்னோடியாகும்.

எதிர்காலமானது அவர்களுக்கு இன்னலைத் தரலாம். எதிர்பாராத திருப்பங்களை எந்த நேரத்திலும் தரலாம். வேண்டாவெறுப்பாக விருப் பங்களை கட்டாயமாக நிறைவேற்றிவிடலாம். இன்பத்தை வாரி இறைக்கலாம். அவர்கள் ஆசையை, நோக்கத்தை மேற்கொள்கின்ற சிேயற்சிகளை எல்லாவற்றையும் தோற்கடிக்கலாம். அப்படி ஆயிரம் துன்பங்கள் நேரும் என்று தெரிந்தாலும், அயர்ந்து போகாமல், சோர்ந்து விடாமல், துடித்துப் போய்விடாமல்