பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
29
 


=

மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பதில் தானே சண்டையும் சச்சரவும், சங்கடமும் சகல துன்பங்களும் உண்டாகின்றன என்று கூறினாய். அது தானே உன் வாதமும், அப்படி ஒரு கணவன், மகிழ்ச்சியான முறையில் வாழவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் நான்கு பகுதிகளாகப் பிரித்து உனக்கு சொல்கிறேன் என்றேன்!.

சொல்லுங்கள்! அதற்குப் பிறகு அதன் வழியிலே நானும் ஏன் கேள்விகளை கேட்கிறேன்..!

மனைவியுடன் ஒருவன் வாழ முற்படும்பொழுது, நான்கு முறைகளில் மனைவியை திருப்தி செய்ய வேண்டும். அதாவது உடலால், மனதால், பணத்தால், அந்தஸ்த்தால், என்பதாக!

இப்பொழுது, மனைவியை உடலால் திருப்தி செய்வது என்பது எப்படி என்ற பகுதியில் மட்டும் உனக்கேற்படும் சந்தேகங்களைக் கேள். முடிந்தவரை விரசமில்லாமல் விளக்கிச் சொல்கிறேன்.

பெண்களுக்குத்தான் அதிகக் காமவெறி இருக்கிறது என்கிறார்கள். அது உண்மை தானா? வாசுவின் கேள்வி அம்புபோல வெளிப்பட்டது.

இது ஒவ்வொருவரின் உடலமைப்பைப் பொறுத்து அமைவதாகும். ஆணின் காதல் வேகத்தை, சுவற்றிலே மோதி உடனே திரும்பி எதிரே வருகின்ற பந்துக்கும், பெண்ணின் காதல் வேகத்தை, சேற்றிலே எறிந்த பந்து அங்கேயே அழுந்திவிடுவது போன்று இருக்கும் என்ற அமைப்புக்கும் ஒப்பிடுவார்கள் பெரியோர்கள்.

திடீரென்று தொடங்கி, ஒரு சுற்றுச் சுற்று, அடித்து,