பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி


புயற்காற்றுபோல, ஆணின் காதல் உணர்வால் தோன்றும் உடல் உறவு வெறியானது பீறிட்டு கிளம்பி அடங்கிவிடுகிறது.

பெண்ணுக்கோ அப்படி அல்ல. பெண்ணின் காதல் உணர்வுகள் மெதுவாக விழித்தெழுந்து, நின்று, நிதானமாகக் கிளம்பி, நீண்டவழி புறப்பட்டு, நொடிக்கு நொடி பெரிதாகி, இறுதியில் ஒரு உச்சக்கட்ட நிலையை அடையும். ஆகவே, அந்த உணர்வு உச்சக்கட்டம் அடையும் வரை ஆண் காத்திராவிட்டால் அவள் ஏமாற்றப்படுவாள்.

அவளது உணர்வு இவ்வாறு ஏமாற்றப்படுகின்ற பொழுது, சில சமயங்களில் வெறித்தனமாகத் தானே கிளம்பும். அவளை முழு அளவில் உடலால் திருப்திபடுத்தும் வரை, தன் வீரியத்தைக் கட்டுபடுத்த முடியாத ஆணினத்தில் சிலர், காமவெறி பிடித்தவள் என்ற ஓர் அவப் பெயரைச் சூட்டி விட்டிருக்கின்றார்கள். அவ்வளவுதான்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் பெண்ணின் உடலில், வலிமை மிகுந்த, காதல் உணர்வினை எழுப்பும் மூன்று ஹார்மோன்கள் அலை அலையாகத் தோன்றி, இரத்த ஓட்டத்தில் கலந்து, உறவு உணர்வினை அளவுடன் சமநிலையிலே வைத்துக் காத்து வருகின்றன என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது பெண்ணுடலில் இயற்கையாக அமைந்து தன்மையாக இருக்கிறது.

சினிமாக்கள், கவர்ச்சிகரமான விளம்பரங்கள், மற்றும் நேர்முகமாகக் காணும் காதல் காட்சிகள், மற்றும் புத்தகங்கள் மூலமாகவும் இந்த உணர்வுகள் விழித்துக் கொண்டு, பெண்ணின் நினைவுகளை, கற்பனைகளுடன், வெளியேற்றி விடுவதும் உண்டு.