பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
31
 


அதனால்தான், பெண்களை அதிகக் கட்டுப்பாட்டுடன் துளர்க்கவேண்டும் என்று அக்காலத்திலே, மிகமிக அர்சரிக்கையுடன், பொன்னைக்காப்பது போல, வீட்டிற்குள்ளே வைத்துப் பாதுகாத்தனர்.

இந்தக் காதல் உணர்வுகள் எல்லாம், திருமணத்தின் மூலமாக மட்டுமே தீர்த்துக்கொள்ளப்படவேண்டும், என்று தான் கட்டுபாடான சமூக சூழ்நிலையை அமைத்து, அக்கால மக்கள் வாழ்ந்தனர். வாழ்ந்து காட்டினர்.

இந்த சமூக நிலையையும், கட்டுப்பாட்டையும் மீறி உடல் உறவு கொள்ளுகின்ற பெண்களைத் தான், கற்பிழந்தவர்கள், வழுக்கி விழுந்தவர்கள். காமாந்தகாரிகள் என்று அழைத்தனர். பழித்தனர். வெறுத்தனர்.

என்னதான் அன்பாக இருந்தாலும், பாசத்துடன் வாழ்ந்தாலும், மனைவி தன்னை ஏமாற்றி, மற்றவனை விரும் புவாள் என்று எண் நண்பர் கள் அடிக் கடி கூறியிருக்கின்றார்கள்! நீங்கள் அதற்கென்ன பதில் சொல்லப் போகின்றீர்கள்?

பெண்கள் மேல் வெறுப்பு கொண்டவர்கள் பாடியிருக்கும் பாட்டும் உண்டு. அதுபோன்ற நிலைமையினை கொடுமையினை அனுபவித்த ஆண்களும் உண்டு. பெண்கள் ஒழுக்கம் கெடுகின்றார்கள், தரம் மாறிப் போகின்றார்கள் என்றால், அதற்கும் ஒரு காரணம் இருக்கத்தான் இருக்கும். காரணத்தைப் புரிந்துகொண்டால், காரியம் நடக்காமல் நாமும் காப்பாற்ற முடியுமே!

ஒரு சில பெண்கள் ஒழுக்கம் கெடுகின்றார்களே? அது ஏன் என்று உங்களால் கூறமுடியுமா?