பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தையையும் சாகக் கொடுத்துச் சஞ்சலப்பட்டு, மீண்டும் ஒரு குழந்தையை மிகவும் வேண்டிவிரும்பி இருப்பவள்; தவிப்பவள்.

கணவனிடம் உடல் உறவு கொள்வதை கடனே என்று தலையில் அடித்துக்கொண்டு சம்மதமில்லாமல் சம்மதிப்பவள்; அதையே வெறுப்பவள்; தவறில்லாமல் நடக்கும் பொழுதே, சந்தேகப்படுகின்ற கணவனால் அடிக்கடி தண்டிக்கப்படுகின்றவள்; நெடுந்துாரம் பயணம் சென்று களைப்புடன் இருப்பவள்; வீட்டில் வேறு யாரும் இல்லாது, தனியே தனித்து வாழ்கின்றவள்; வயது வந்த மைத்துனர்களுடன் ஒரே வீட்டில் வசிக்கின்றவள்; கணவனை மதிக்காது, விரும்பாது தன் தாய் வீட்டிலே எப்பொழுதும் வாழ்பவள்; சந்தேகப்படுகின்ற கணவனிடம் சிக்கிக் கொண்டவள். கணவன்மேல் சந்தேகப்பட்டுக் கொண்டு, வீணே அலட்டிக் கொண்டு, ‘நானும் அது போல் செய்கிறேன் பார்’ என்று சவால்விட்டு வாழ்பவள்; இளம் வயதிலேயே தன் கற்பைஇழந்தவள்; இயற்கையிலேயே அன்புக்கு நெஞ்சம் நெகிழும் தன்மையுடையவள்;

கை, கால் போன்ற உறுப்புக்களில் அங்கஹீனம் உள்ளவனின் மனைவி; வாய் நாற்றமும் உடல் துர்நாற்றமும் உள்ளவனின் மனைவி; முரட்டுத்தனமாகவும், முட்டாள் தனமாகவும் நடந்துகொள்கிறவனின் மனைவி; சதாகாலமும் நோயாளியாக வாழ்கின்றவனின் மனைவி;

இவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு காரணம் கருதி, தங்களைத் தாங்களே தத்தம்செய்துகொண்டு, யாரையாவது தாங்கள் விரும்பியவர்களுடன் உடலுறவு கொள்ளத் தயாராகும் மனோநிலையில் இருக்கின்றர்கள் என்று பழங்கால மனோதத்துவ நூல்கள் விரிந்துரைக்கின்றன. அவர்கள்