பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி


மேற்கூறிய தகுதியுடைய ஆண்மகனை பெண்கள் விரும்புகின்றனர் என்றே வைத்துக்கொள்வோம். அவனும் காதலிக்க விரும்புகிறான் என்றால், அதற்கும் ஏதாவது கட்டுப்பாடு இருக்கிறதா? நிச்சயமாக இருக்கிறதே! ஒரு பெண்ணுடன் ஒரு ஆண் உடலுறவு கொள்ள விரும்புகிறான் என்றால், அவன் யார் யாரிடம் உடல் உறவு வைத்துக் கொள்ளலாம் என்ற கட்டுப்பாட்டையும் அக்காலத்தில் எச்சரிக்கை செய்து வைத்திருந்தார்களே! "தன் தரத்தைவிட தாழ்ந்திருக்கும் பெண்; பூப்படை யாத பெண்; அங்கஹீனம் உள்ள பெண், துறவியாக வாழுகின்ற பெண்; அறிவு குழம்பி, பைத்தியமாக வாழுகின்ற பெண்; தேகத்தில் துர்நாற்றம் அடிக்கின்ற பெண்; தன்னைவிட வயதில் மூத்த பெண்; அடுத்தவனின் மனைவி” மேற் கூறியவர்களுடன் எக்காரணத்தை முன்னிட்டும் உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்று பெரியோர்கள் திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றனர். தடுத்திருக்கின்றனர், மீறியவர்களை தண்டித்தும் இருக்கின்றனர். அதனால்தான், பொருத்தம் பார்த்து திருமணம் வைக்கிறார்களோ! ஆமாம்! நமது முன்னோர்கள் மிகவும் திறமையானவர்கள், அவர்கள் ஒரு ஆணையும் பெண்ணையும் நன்கு ஆராய்ந்து, உடலமைப்பினைப் பார்த்து தெரிந்து கொண்டுதான், பொருத்தம் பார்த்திருக்கின்றார்கள். அதையே இப்பொழுது ஜாதகமாக்கிப் பார்க்கிறார்கள். ஆண்களின் உடலமைப்பைக் கொண்டு அவர்களை மூன்று பிரிவாகவும், பெண்களின் உடலைமைப்பை ஆராய்ந்து மூன்று பிரிவாகவும் பிரித்தனர். அதனைக் கொஞ்சம் விளக்கமாகக் கூறுகிறேன்.