உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏமாற்றத்தால், தான் நினைத்ததைச் செய்துவிடவும் தயங்க மாட்டாள் என்றே சாத்திரங்கள் கூறுகின்றன.

அதெப்படி அவ்வளவு திட்டவட்டமாகக் கூறுகின்றீர்கள்?

ருசியான உணவு, பகட்டான உடை, உல்லாசமான வாழ்க்கை, ஊரார் புகழ்வதற்குகேற்ற பங்களா, கார்போன்ற பலவிதமான வசதிகளைச் செய்து தருகின்ற தன் கணவனை மதிக்காமல், மரியாதை தராமல் அலட்சியமாக நடத்துகின்ற பெண்களை நீ சமூகத்தில் சந்தித்திருப்பாய் என்று நினைக்கிறேன்.

இத்தனை வசதிகளையும் தந்துவிட்டு, மனைவிக்கு அடங்கி ஒடுங்கிப் போகின்ற நன்கு படித்த பணக்கார, வசதியுள்ள ஆண்களையும் நீ பார்த்திருப்பாய்!

‘கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை’ என்று ஓர் இலக்கிய வரி உண்டு. அதற்குரிய பொருளையும் சொல்லுகிறேன். கண்ணாடி முன்னால் நின்று கொண்டு, நாம் எப்படி கையையும் காலையும் தூக்கி உயர்த்துகிறோமோ, அது போலவே கண்ணாடியில் தெரிகின்ற நிழற்பிம்பமும் அசையும். செய்து காட்டும்.

அதுபோலவே, மனைவியின் பேச்சுக்கு மறுபேச்சில்லாமல் மனவிைக்கு அடங்கி ஒடுங்கிப் போகின்ற கணவன்மார்களின், முக்கால் வாசிப்பேர், மனைவியை உடல் உறவில் முழுமையாகத் திருப்திபடுத்த இயலாததால் தான் இப்படி இருக்கின்றனர் என்று உடல் உறவு முறை பற்றி விளக்குகின்ற நூல்கள் கூறுகின்றன. சொல்கிறேன்.

உதாரணத்திற்கு ஒன்று நல்லஉணவோ, அழகான சேலையோ, நாவுக்கு ருசியான சுவையான பொருட்களையோ, வாங்கித் தராத, உடற்கட்டு மிகுந்த ஓர் ஏழைக் கணவனிடம், அவனது மனைவி அடங்கி