உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி



ஒடுங்கி, அவன் சொல்கின்ற வார்த்தைக்கு மறு வார்த்தை பூனைபோல் கணவனுடன் குழைந்து பேசாமல், செல்வதையும் நீயும் பார்த்திருப்பாய்!

அவன் முரட்டுத்தனமாக அடிப்பான் என்பதற்காகப் பயந்துகொண்டு, அவனுடன் அப்படி வாழலாம் இல்லையா?

அதுதான் தவறு. ஒருவரை அடிப்பதனால் மட்டுமே அடங்கி ஒடுங்கி விடமுடியாது. உடல் திருப்தியால் எழுகின்ற உணர்வுகள், அந்த சக்தியும் திறமையும் படைத்த கணவன் முன்னே அவளை சரணகதியடைய வைத்துவிடுகிறது. திருப்தியடையாத பெண்ணின் உணர்வுகள் திமுறிக்கொண்டு, எழுந்து திணறிக்கொண்டு துள்ளிவிழுவதானது, திறமையில்லாத கணவனை சாடவைக்கிறது. அவனை சதிராட வைக்கிறது. அதனால் ஒரு நிம்மதியை நிறைவேறாத உணர்வுகள் நிறைவாகப் பெற்று மறைமுகமாகக்களிக்கின்றன. சுகம் காணுகின்றன. அதுவே உண்மையான ரகசியமாகும்.

இந்த உடல் உறவைப்பற்றி பூடகமாகச் சொன்னால் எப்படி புரியும் எனக்கு?

நாளை காலையில் சொல்லுகிறேன் என்று நழுவினார் உலகநாதர்.

விடியுமட்டும் காத்திருக்கவேண்டுமே என்று முனகியவாறு எழுந்தான் வாசு. நட்சத்திரங்கள் கண்ணை சிமிட்டி மின்னின. நிலவும் மறைந்து மறைந்து அவனைப் பார்த்து சிரித்தது. எதையும் காணா விழியனாகி, தன் படுக்கையை நோக்கி விரைந்தான் என்றாலும், அவனது எண்ணங்கள் எதை எதையோ சிந்தித்து அசைபோட்டுக்கொண்டிருந்தன.