பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
41
 


4. உறவும் நிறைவும்)

உடல் உறவில் திருப்தி ஏற்பட்டால் தானே, உறவுக்குரியவனிடம் உண்மையான அன்பும் பிறக்கும் என்கிறீர்கள்! என்று ஆற்றை நோக்கி காலையில் நடந்து கொண்டடிருக்கும்போது, வாசு கேட்டான்.

ஆமாம் என்று ஆரம்பித்தார் உலகநாதர். இந்த உண்மையான அன்பு தான் உலகத்தை ஆள்கிறது. உலக மக்களை ஒருங்கிணைத்து வழிநடத்திச் செல்கின்றது.

தனக்கு பிரியமானவரை அல்லது அன்புக்குரியவனை பார்த்த உடனேயே, அந்த அன்பும் இன்பமும் உள்ளத்தில் பீறிட்டுக் கொப்பளிக்கின்றது. அவர்கள் சேர்ந்து இருக்கும் வரை, இன்ப நினைவுகள் மனதிலே கூடுகட்டிக்கொண்டு உற்சாக ஊஞ்சலாடி மகிழ்கின்றன. இனிக்கும் போதையில் நர்த்தனமாடுகின்றன.

எந்தப் பொருளைப் பார்த்தாலும், அதிலிருந்து தோன்றும் தொடர்பான எண்ணங்கள் எல்லாம், தனக்குப் பிரியமானவரைச் சுற்றிச் சுற்றியே வட்டமிடும். பின்டாகப்பாடும். பிரியும்போது தடுமாறும், நடைமாறும்.

இத்தகைய மகிழ்ச்சி எண்ணங்கள் முகிழ்க்க, த்ெதிரையும் நெருங்கி வராதவண்ணம் நிலைமாறும்,