பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி


நித்திரைக் குறையக் குறைய பசியும் குறையும். தாகம் மறையும். தேகம் மெலியும். செயல்களும் தடுமாறும். தன் அன்புக்குரியவருக்காக, தன் உயிரையே அர்ப்பணித்துக் கொள்கின்ற உறுதிவாய்ந்த உள்ளத்தை உருவாக்குகின்ற சக்தியையே இந்த அன்பு கொடுத்து விடுகிறது என்றால், இந்த அன்புக்கு எவ்வளவு சக்தியிருக்கிறது பாாத்தாயா? என்று அன்பு விமரிசனம் செய்தார் உலகநாதர்.

‘புதிதாக மணமான தம்பதிகளுக்கு இத்தகைய உண்மையான அன்பு வேண்டும்’ என்றும் சொல்லிக் கொண்டே நடந்தார்.

புதிதாக மணமான தம்பதிகளுள் சிலர், கணவனிடமிருந்து விடுபட்டு, பொங்கலில் விடுகின்ற மஞ்சு விரட்டுக்காளைபோல தன்தாய் வீட்டுக்கே ஒடிப் போய் விடுகின்றார்களே, அவ்வாறு பெண்கள் ஓடிப்போய்விடக் காரணம் அன்பு இல்லாததனால் தானே?

அதற்கும் ஒருசில காரணங்கள் இருக்கத்தான் இருக்கின்றன. புதுஇடம், புதுஉறவு, புதுசூழ்நிலை என்று பெண்ணுக்கு ஏற்படுகிறபொழுது, ஒரு பெண்ணுக்கு அச்சமும், எப்படியிருப்பார்களோ கணவனது பெற்றோர்கள்? எவ்விதம் தன்னை ஏற்றுக்கொள்வார்களோ? என்ற பயமும் அவளை ஆட்டிப் படைக்கும். இதனால் தான் மனைவியை ‘அஞ்சிவரும் உரிமை’ என்று தொல்காப்பியர் கூறுகின்றார்.

கணவனைப் பற்றியும், கணவனது வீட்டாரைப் பற்றியும் , மற்றவர்கள் கண்ட கண்ட விதமாகக் கூறியனவற்றைக் காதில் வாங்கிக்கொண்டு, அவற்றைக் கற்பனை செய்து பார்த்துக்கொண்டு, திகிலுடனும் மருண்டும் திருமணப் பெண் கணவன் வீடுவருவதும் இயல்புதான்.

அப்பொழுது, கணவனும் வீட்டாரும் அந்தப் பெண்ணிடம் இதமாகவும், பதமாகவும் நடந்துகொள்ள