ரயிலிலோ பஸ்ஸிலோ நாம் பிரயாணம் செய்வதாக வைத்துக்கொள்வோம். அப்பொழுது பல பேர்களை, புதியவர்களை நாம் சந்திக்கிறோம். அவர்களுடன் பழகும்போது நாம் என்ன செய்கிறோம்? முதலில் நம்மை அறிமுகப்படுத்திக்கொள்கிறோம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ள முயற்சிக்கிறோம்.
பேச்சின் இடையிலே அவர்களின் மனம் கோணாதவாறு உரையாடுவதும், தின்பண்டங்கள் தந்து உறவு கொள்வதும் போன்று பழகுவதுபோல, தனது புதிய துணைவியிடமும் பழகி அவளின் அன்பைப் பெறவேண்டும்.
மனைவியை நட்புக்கு உரியவளாக மாற்றுகின்ற வழியில் ஆரம்பத்தில் சொல்லாடுவதும், உரையாடி மகிழ்வதும், தன்னுடன் இணக்கத்திற்கு ஏற்றவளாகப் பேசி மகிழ்விப்பதும் தான் உரையாடுதல் என்பதில் இருக்க வேண்டும். மனைவியை கிண்டலாகப் பேசித்தான் உரையாட வேண்டும் என்பது கூடவே கூடாது. பொது விஷயங்கள் பேசலாம். அல்லது, ஒருவரைப் பற்றி ஒருவர் பேசி அறிந்து, அவரவர் திறமையைப்புரிந்து, மகிழ்ந்து பாராட்டிக் கொள்ளலாம்.
இதில் முக்கியமாக ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பெண்ணின் மனமறிந்து பேசி நட்புகொள்ள வேண்டியது என்பதுதான்.
நட்புடன் முகமலர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, ‘தழுவுதல்’ போன்ற காரியங்கள் செய்தாலும், பெண்ணுக்குரிய அச்சமும், நாணமும், மடமும், பயிர்ப்பும் அவளைத் துடிக்க வைக்கும். சில சமயங்களில் தடுத்து நிறுத்தவும் செய்யும். இதுபோன்ற நிலையில், விளக்கின் ஒளியில் இருப்பதைவிட, முகம்தெரியாத மங்கலான