பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
48
மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி
 


செய்தல் நன்மையே பயக்கும். சரசம் எந்த நேரத்திலும், எக்காரணத்தை முன்னிட்டும் விரசமாகி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உடலுறவு முயற்சியை மேற்கொள்வதற்கு முன், மனைவியைத் அந்த உச்ச நிலைக்குத் தயாராக்கும் பொறுப்பு கணவனையே சார்ந்ததாகும். மனைவியின் மனமொத்த ஒத்துழைப்புக்கு, அவசியம் அவளிடம் இணக்கம் பெறுவதும், இல்லையேல் இணக்கம் பெறத் தூண்டி இசைவு பெறுவதும் மிகவும் அவசியமானதாகும். சுவையான செய்திகளைப் பற்றிப் பேசிக்கொண்டு, அதற்கு மறுமொழி கிடைப்பது போன்ற வகையில், மனைவியை பேசவைத்தவாறே செயல்முறையில் ஈடுபடுவது, இருவருக்குமுள்ள இடைவெளியை மேலும் குறைத்து, ஒரு இனிய சூழ்நிலையை உருவாக்கும்.

எத்தனை நாளைக்கு இப்படி நடந்துகொள்ள வேண்டும்.?

மனைவியானவள், தன்னை முழுவதும் அவனிடம் தருவதற்குத் தயார் என்ற நிலை வருகின்ற வகையில் தான் இப்படி நடந்து கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்ந்தவளாக இருந்தால் முதல் மூன்று நாட்களே போதுமானது என்பார்கள். என்றாலும் இப்பொழுது கவர்ச்சி மிக்கப் படங்கள், கதைகள், சினிமா, நாடகங்கள், பத்திரிக்கை விளம்பரங்கள் போன்றவற்றைக் கண்டறிந்து, பெண்ணும் முதலிரவே தயார் என்ற நிலைக்கு வந்து பதமானால், பக்குவமான முறையிலே உடல் உறவை மேற்கொள்ளலாம்.

எப்படி என்று விளக்கிக் கூறாமல் மேம்போக்காகக் கூறினால், என்னைப் போன்றவர்கள் எப்படி புரிந்துகொள்ள

rமம ம் என்mான் வாா.