பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனைவியுடன மகழசசயாக வாழவது எபபடி

வட்டமிடும். ஏற்கனவே கட்டிமுடித்த கூந்தலை அல்லது உடையை கரங்கள் கோதி விடும்! அதனை அடிக்கடித் தழுவிக்கொள்ளும்; அன்புக்குரியவன் பார்வை தன் மேல் படும்பொழுது, மேலாக்கை நழுவவிடுவது போல தவறவிட்டு, மேலழகை வெளிப்படுத்திக் காட்டும். வேலைநேரம் என்றால், தவறுதலாக நேர்வது போல. தன் துடையழகையும் வெளிப்படுத்திக் காட்டும். ஏற்கனவே இறுக்கமாகக் கட்டியுள்ள ஆடையை தளர்த்தி விட்டுக் காட்டும் பாங்கெல்லாம் அன்பை வெளிப்படுத்திக் காட்டும் குறிப்பேயாகும்.

காதலனை சாந்தமாகப் பார்ப்பதும், ரகசியமாக பார்த்து சிரிப்பதும், வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு அடிக்கடி பேச முயற்சிப்பதும், அருகிலே உள்ள குழந்தையிடம் அவர் காதில் படும் படியாக பேசுவதும் எல்லாமே தன் அன்பை வெளிப்படுத்திக் காட்டும் அற்புத சைகைகளாகும். அன்பைத்தான் மனைவி காட்டி விடுகிறாளே! அவளிடம் எவ்வாறு நெருங்குவது? எவ்வாறு நெருக்கம் பெறுவது? அதற்கென்று ஏதாவது விதிகள் உள்ளனவா என்றான் வாசு!

விதி என்று ஒன்று இல்லாவிட்டாலும், எதற்கும் முறை ஒன்று இருக்கிறதல்லவா! மதியைக் கொஞ்சம் பயன்படுத்தினால் வருவது நிதிதான். இல்லையேல் நல்ல கதி பெறுவது கஷடமே!

மனதால் நெருங்கிவிட்ட பிறகு, இனி உடலால் நெருங்கும் முறையைத்தானே கேட்கிறாய். பெண் உடலில், பருவ உணர்வுகள் எல்லா இடங்களிலும் பரவி இருந்தாலும் அந்த இன்ப உணர்வுகளை எழுச்சியுறச் செய்வதற்கென்று உடலில் ஒரு சில இடங்கள் இருக்கின்றன. அவைகளைத் தடவும்பொழுதும், தழுவும் பொழுதும், உடல்உறவுக்குரிய உணர்வு ஓங்கி எழுந்து உச்ச நிலைக்கு வந்து விடுகின்றன.