பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
53
 


எரிச்சலும் ஏற்படுகிறது. அதனால் இருவருமே துன்பமடைகின்றனர்.

ஆண்குறியின் முன்பாகம் சிராய்வு ஏற்பட்டு, சில சமயங்களில் புண்ணாகியும் போகும். பெண்ணாலும், அந்த எரிச்சலினால் இதமாக ஈடுகொடுக்க முடியாதவாறும் ஆகும். ஆகவே, பெண தயாராக வரும் வரை ஆணி புறவிளையாட்டுக்களில் ஈடுபடுத்திப் பொறுத்திருப்பது தான் சாலச் சிறந்ததாகும்.

பொறுமை இல்லையென்றால் என்ன செய்வது? பொறுமை இல்லையென்றால், ஆண் தன் சக்தி முழுவதையும் சேர்த்து, தானே உடலுறவில் ஈடுபட, அதன் காரணமாக ஆணுக்கு விந்து விரைவில் வெளியாகிவிடும். பெண்ணுக்கு உச்சநிலை (Climax) வருவதற்குள், ஆண் செயலற்றுப் போனால், பெண்ணின் நிலை என்னவாகும்? ஏமாற்றம்தானே தொடரும்!

ஏமாற்றம் ஒரு முறை என்றால் பரவாயில்லை. பெண் பொறுத்துக்கொள்வாள். சகித்துக்கொள்வாள். தினமும் இதே கதை தொடர்ந்தால், அவளுக்கு சங்கடம் நேர்வது மட்டுமல்ல; உடலுறவில் சலிப்பும் ஏற்பட்டுவிடும். கணவனுடன் பேசும்போது கடுகடுப்பும், எரிச்சலுமே அந்த ஏமாறும் பெண்ணிடமிருந்து பூதமாகக் கிளம்பும். ஆகவே, உடலுறவு என்றால், பெண்ணும் திருப்தியடையும் வரை, தொடர்ந்து இருவரும் இன்ப உறவு நிலையில் இருப்பது என்பது தான் உண்மையான முறையாகும்.

ஒரு பெண் உடலுறவில் திருப்தியடைந்து விட்டாள் என்பதை எப்படி தெரிந்து கொள்ள முடியும்.?

உடலுறவு முடிந்து விடுகிறது. அதில் அவள் திருப்தியடைந்து விட்டாள் என்றால், அவள் தன் தேகத்தை