பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

55



=

இன்னும் சிலர் கோபத்தால் கணவனை அடித்தும் கூட திடுவார்கள். என்றும், இன்னும் சிலர் 'கணவனை விந்து விரைவில் வெளியாக விடுகிறது. அவ னா ல இயலவில்லை என்று அறிந்தும் அவன்மேல் ஏறி வலிந்து படுத்துக் கொண்டு, தன்னிச்சையாக செயல்படத் தொடங்கிவிடுவார்கள் என்றும் பழங்காலநூல்கள் கூறுகின்றன.

ஆணுக்கு அந்த இயலாமை எப்படி ஏற்படுகிறது? ஆணுக்கு ஆண்குறியில் வலுவில்லாத தன்மை இருந்தால், நிச்சயம் தனது மனைவியை மகிழ்ச்சிப்படுத்த முடியாமல் போய்விடும்.

சிறியவயதில் 'சுயஇன்பம் பெற்று, அதன் காரணமாக நரம் புத் தளர் ச் சி ஏற் பட் டவர் கள் , உணர்ச்சிகரமான நிலையில் உடல் உறவில் அதிகநேரம் இருக்க முடியாது. முற்றிய நோயுள்ளவர்களால் கூட, உடலுறவில் அதிக அளவு ஈடுபாடு கொள்ள முடியாது.

நூற்றுக்குத் தொண்ணுறு சதவிகிதம், ஆண்கள் தங்களுக்குள்ளேயே போட்டுக்கொண்டிருக்கிற மனப் போராட்டத் தாலும், கணக் கற்ற ஆவல் களாலும், குழப்பங்களாலுமே இந்த உணர்வும் குன்றிப் போய் இருக்கின்றனர். தன் உறுப்பும் நரம்புத் தளர்ச்சி காரணமாக வலுவிழந்து போய் தவிக்கின்றனர்.

அப்பொழுதும் உள் மனதில் காதல் உணர்வுகளும், உறவிலும் ஒருவித வலிப்பும் ஈடுபாடும் இருந்தால் தான் உள்ளத்தில் கிளர்ச்சியும், உறுப்பில் உணர்ச்சி மிகுந்த எழுச்சியும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும்.

இந்த இயலாமையைப் போக்க வழியே கிடையாதா?