பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
56
மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி
 


இருக் களிறது. அந் த வழி அவனது மனைவியிடந்தான் இருக்கிறது.

உடல் உறவு என்பது, ஒருவரே முயன்று, ஒருவரே இயக்கி, தனியே இன்பங்காணும் காரியமல்ல; அது சாத்தியமும் அல்ல.

கணவன் மனைவி இருவரும் கலந்து பேசி, கனிந்து கூடி உணர்ந்து பெறக்கூடிய இன்பமே தாம்பத்ய சுகமாகும். ஆகவே இரண்டு பேரும் விரும்பி ஈடுபட்டால்தான் சுவையும் இருக்கும்; சுகமும் இருக்கும்.

கணவன் வலுவிழந்து, உடலுறவில் திருப்தி தரமுடியாமற் போனால், தானும் திருப்திபெற முடியாமற் போனால் திருப்தியடையாத மனைவி, அந்த சமயத்தைப் பெரிதுபடுத்திக்கொண்டு, கணவனது இயலாமையை மிகுதிப் படுத் திக் கணவனை கேலி செய்வதும் , கேவலப்படுத்துவதுபோல, கொச்சை மொழியினைக் கொட்டுவதும் கூடாது. அது தவறாகும்.

கணவனின் இயலாமைக்குரிய காரணத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். கணவனின் அதிகமான குடும்பப் பொறுப்பை, உத்தியோகத்தில் உண்டாகும் சுமைகளை, சுற்றுப் புறத்தில் நிகழும் கவலைகளை அதிக உடல் உழைப்பை, தானே வலியப் போய் ஏற்றுக் கொண்டு அதனால் அதிகம் அவதிப்படுவதை மாற்றி, கணவனுக்குத் தேவையான சேவைகளை முதலில் மனைவி செய்ய வேண்டும்.

கணவனுக்கு தெம்பு ஊட்டுவதைப் போல் தைரியம் தருவது போல, தன்னம்பிக்கையை ஊட்ட வேண்டும்.

கணவனுக்குத் தான் செய்கின்ற பணிவிடையின் மூலம் மீண்டும் அவரது வலிமையை மேலும் கொண்டுவர