பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மனைவி என்ற மந்திரச் சொல்தான் ஒரு மனிதனை மனிதனாக மாற்றக்கூடிய வல்லமை பெற்றது என்றால், யாராவது மறுப்பார்களா? எத்தனை பெரிய மனிதர்களானாலும், பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் இல்வாழ்க்கையில் அடி எடுத்து வைக்க வாழ்க் கைத் துணையாக வந்து குடும்பத்தைத்தாங்கி, சமுதாயத்தில் கணவனுக்கென்று ஒரு மரியாதைத் தேடித்தருபவர் மனைவி. நல் ல குழந் தைகளைப் பெற்று நல ல பெற்றோர்களாகவும், மருமக்களைப் பெறவும், தேடிவந்த உறவுகளைப் பேணிகாக்கவும் மனைவியின் கடமை அளப்பறியது. அப்படிப்பட்ட உயர்ந்த இடத்தில் இருக்கும் மனைவியோடு உறவு கொள்வதும், விட்டுக் கொடுத்து வாழ்வதும் ஓர் அற்புதமான கலை என்றே சொல்லலாம். இல் லறத் தனி ன் இனிய அனுபவங் களை கேள்விபதிலாகத் தந்து புதுமணத் தம்பதிகளுக்கு நல்வழி காட்டுகிறார் டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா. இல்வாழ்க்கையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. படியுங்கள், சுவையுங்கள், வாழ்வில் வெற்றி பெறுங்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டாம் பதிப்பாக இந்நூல் வெளிவருகிறது. இனிய வாழ்த்துக்கள் அன்புடன் ஆர். ஆடம் சாக்ரட்டீஸ் பதிப்பாளர்