பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி



மீண்டும் நல்ல உடல் நலம் வந்திருக்கும் பொழுதும்: நாட்டியம் நடனம் போன்ற உடலுழைப்பில், கலையுழைப்பில் ஈடுபட்டதற்குப் பிறகும்; மகப்பேறு முடிந்து ஒரிருமாதங்கள் கழிந்தபோதும், பெண்கள் உடலுறவில் அதிகமாகத் தீவிரம் காட்டுவாள்கள் என்று நம் முன்னோள்கள் கூறியிருக்கிறாள்கள். தம்பதியர் நீண்ட நாள் பிரிந்திருந்து ஒன்று சேருங்காலத்தும்; ஊடல் அல்லது சிறு சச்சரவு ஏற்பட்டு மீண்டும் தொடங்குகின்ற சமாதான நேரத்திலும் மாதவிடாய் நாட்கள் முடிந்துவிட்ட மறுநாளிலும்: மதுபானம் போன்ற வெறியேற்றும் போதை தரும் பானங்களை அருந்தியுள்ள நேரத்திலும், பெண்கள் நிறைந்த வேகம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

உடலுறவு தேவையில்லை என்றால்? ......... உடலுறவு தேவையில்லை என்றால். ஒன்று உடல் நலக்குறைவாக இருக்க வேண்டும் அல்லது உடலுறவு வேண்டாம் என்ற மனக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால், மனைவி கணவன்மீது கோபமாக இருக்கிறாள் என்ற ஏதாவது ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.

கணவன் மனைவி வெறுக்கிறாள், கோபமாக இருக்கிறாள் என்பதை எப்படி அறிந்து கொள் முடியும்?. நேரடியாகக் கோபத்தைக் காட்டி, பேசி விட்டால், எளிதாகப் புரிந்து கொள்ளலாம். எதுவும் சொல்லாமல், கோபமாக இருக்கிறாள், கணவனை வெறுக்கிறாள் என்பதை அவள் செயல்கள் மூலமாகவே புரிந்து கொள்ள வேண்டும். கோபமடைந்த மனைவி, தன் கணவனை ஏறெடுத்துப் பார்க்கமாட்டான். ஏதாவது ஒரு வேலையை வைத்துக் கொண்டு அவனிருக்கும் பக்கமே வரமாட்டாள்.