பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உங்களுக்குப் பதில் கிடைக்கும் என்று அந்த அம்மையார் பதில் கூறினாராம். அப்பொழுது அம்மையாருக்கு வயது 99.

ஆகவே, உடல்நலம் நிறைவாக இருக்கின்ற வரை, உடல் உறவில் நாட்டமும், நனிசால் ஊட்டமும் இருக்கும். உடல் உறவு தினந்தோறும் கொள்வது நல்லதா? உங்கள்அபிப்ராயம் என்னவென்று கூறுங்கள்.

'மாதத்துக்கு இருவிசை மாதரைப் புணர்தல் என்றும் பழம் பாடல் ஒன்று கூறுகின்றது. மாதத்தில் இருமுறை இரு தடவை என்று அந்த கவிஞனும் பாடாமல். இருவிசை என்று பாடியிருக்கிறார். விசை என்றால் வேகம், வலிமை என்று பொருள்படும்.

ஆணும் பெண்ணும் விசையோடும் நசை(விருப்பம்) யோடும் மாதத்திற்கு இருமுறை புணர்ந்துவிட்டால், அந்த இன்பம் நாளெல்லாம் தொடரும். நெஞ்சத்தில் படரும். உடல் நலமும் கெடாதவாறு, வாழ் க் கையின் முன்னேற்றத்திற்கேற்ற வேலைகளை சுறுசுறுப்பாக செய்யவும், நிம்மதியாக உறங்கவும் கூடும். அத்துடன் விந்து நீற்றுப் போகாமல் இருப்பதால் உடல் உறவில் உண்மையாக ஈடுபட முடியும்.

இக்காலத்தில் சினிமா, நாடகம், பத்திரிகை பற்றிய விளம்பரங்களில், பேச்சுக்களில் நடைமுறைகளில் எல்லாம் இன உறவு பற்றி, இன உணர்வை எழுப்பும் தன்மையே அதிகம் இருப்பதால், இரவில் அந்தக் கிளர்ச்சியும் எழுச்சியும் நிமிர்ந்து நிற்பது இயல்பே'

மனக் கட்டுப் பாடுள்ளவர் கள் அந்த மாயா சக்தியிலிருந்து தப்பித்துக்கொண்டுவிட முடியும். உடல் இச்சைக்கு அடிமையாகி விடுவபவர்கள் உண்ணுவதும்,