பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5
 

என்னுரை

இந்நூல் ஓர் உடல் நல நூல்.

இன்னும் சொல்லப் போனால், இது ஒரு இதமான உடல் நலத்தினால் எழுப்பப்படும் பதமான மனோபலத்தை ஊட்டும் மன நல நூல் என்றும் சொல்லலாம்.

ஏறத்தாழ அறுபது நூல்களுக்கு மேல் உடலுக்குப் பலத்தையும் வளத்தையும் ஊட்டுகின்ற உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுத்துறை நூல்களை எழுதி வந்த நான், இந்தத் தலைப்பில் நூல் எழுத முனைந்ததற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு.

கல்லூரியில் உடற் கல்வி இயக்குநராக இருந்தபோதும், சென்னை டி.வி.எஸ். நிறுவனங்களில் மனமகிழ் மன்ற மேலாளராகப் பணியாற்றிய சமயங்களிலும், உடலழகுப் பயிற்சிப் பள்ளி என்று தொடங்கிய உடற் பயிற்சிப் பள்ளியிலும் என்னை அணுகிய இளைஞர்களும், மணமான நண்பர்களும் கேட்ட கேள்விகளைத் தொகுத்து, அவற்றிற்குப் பதிலாகத் தான் இந்த நூலை இப்பொழுது படைத்துள்ளேன்.

உடலுக்குப் பலத்தை உண்டாக்கி விடுவது கடினம் என்றாலும், முயன்றால் அது சுலபமே. ஆனால் உருவாக்கிக் கொண்ட உடல் பலத்தை, வீணாக்கி விடாமல் கட்டிக்காத்து வாழ்வது என்பது முயன்றாலும் கடினமே!