பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | Сло 1 * R - - - - r- == ****

நோக்கங்களும் உண்டு என்பதை கணவன் முதலில் புரிந்து இநாள்ள வேண்டும்.

மனைவியின் மேற் கூறிய மனநிலையைப் புரிந் து கொணி டு, அவளது நோக கங் களுக் கு, ஆசைகளுக்கேற்ப, தன்னை முதலில் இயைபுபடுத்திக் இநாள்ளும் மனப்பக்குவத்தைப் பெற்றுக் கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும். அவளது லட்சியமும் நோக்கமும் தனது வாழ்வின் முன்னேற்றத்திற்கு மிகவும் பயன்படும் என்று அறிந்து கொள்ள நேர்ந்தால், அவற்றை நிறைவேற்றும் முயற்சிகளில் தங்கு தடையின்றி, தாராளமாக ஈடுபடுதல் நல்லதாகும்.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால்,பெண்ணையே பின் பற்றி வாழ்ந்தால் தான் மகிழ்ச்சியுடன் வாழமுடியும் என்கிறீர்கள்.! அப்படித்தானே!

இங்கு தான் நீ தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய். பெண்ணைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும் என்பது "பெண்டாட்டி தாசனாக வாழ், அவள் முந்தானையைப் பிடித்துக் கொண்டே பின்னாடி செல்' என்பது அல்ல.

வாழ்க்கை என்பது உடலால், அறிவால் நன்கு வளர்ந்து, முதிர்ச்சி பெற்ற இருவர் இணைந்து, துணிந்து வாழ்கின்ற நிலையாகும்.

மனைபுகுகின்ற மனைவியை மனமார வரவேற்க முனைவது போலவே, அகம் உருக அன்புடன் நேசிக்க வேண்டும். நீ நேசிக்கிறாய் என்பதை அவன் உணரும் பொழுது தானே, உன் நிழலாக வர அவள் துணிகிறாள். அதனால் தான் அவளது நினைவோடு உன் னை நிலைநிறுத்திக் கொள்ளுமாறு கூறினேன்.

கணவன் உட்பட, கணவனின் பெற்றோள்கள், தங்கை, தம்பி, அக்காள், அண்ணன், மற்றும் உடன் பிறப்பு