பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
72
மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி
 


எல்லோருமே அவளுக்குப் புதியவர்கள். அது ஒரு புதிய சூழ்நிலை. அந்தப் புதிய சூழ்நிலையில் பழகிக் கொள்ளுமாறு தூண்டுவது கணவன் தானே! அவளது லட்சியம் நோக்கம் புரிந்தால் தானே, தன் குடும்பத்துடன் எளிதாக இணைக்க முடியும்.!

மனைவியைப் பெருந்தன்மையுடன் நடத்தி, தன் கணவனும் மற்றவர்களும் தன்னுடன் பிரியமாகவே நடத்துகிறார்கள், நடக்கின்றார்கள் என்ற நம்பிக்கையை கணவன் தன் மனைவிக்கு ஊட்ட வேண்டும்.

அவளுக்கென்று ஒரு அந்தஸ்து விட்டில் இருக்கிறது. பொறுப்புக்கள் இருக்கின்றன என்ற நினைவினை அவளுக்குக் கொஞ்சங் கொஞ்சமாகப் புகுத்தவேண்டும்.

ஆரம்ப காலத்தில் இந்த நம்பிக்கையை, இனிய உணர்வை ஊட்டி, புதிய சூழ்நிலையிலிருந்து அவளை விடுவித்து, புதிரைப் போக்கினால்தான், மனைவிக்கு அந்த இல்லத்திலும், நடத்தவிருக்கும் இல்லறத்திலும் இயல்பான பிடிப்பு ஏற்படும்.

மனைவியை உடலால் திருப்திபடுத்திவிட்டால் போதும் எல்லாம் சுகமாக சுமுகமாக நடந்துவிடும் என்று முன்பு கூறினர்களே?

உண மைதான் , மனைவியை உடலால திருப்திபடுத்தினால் போதும் என்பது அடிப்படை ஆதாரமானது கிடைத்துவிட்டால், அதனால் மனம்மகிழும், வாழ ஆசை ஏற்படும். அந்த ஆசைக்குரிய பிடிப்பு அங்கு இருக்க வேண்டாமா?

உடலால் மனைவியை கவர்வது போலவே, உணர்வாலும் மனைவியைக் கவர்ந்து, கலந்து வாழ்வதும் ஒரு ஒப்பற்ற கலைதான்.