பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

73



உயிருக்கும் மேலான பெற்றோர்கள் உடன்பிறந்தோர்களை உரிய சுற்றத்தை, பிறந்த வீட்டில் பெற்றிருந்த உரிமையை, சுதந்திரத்தை, செல்வத்தை, புதிதாக வரும் கணவன் என்ற ஒருவனுக்காக, எல்லாவற்றையும் பறிகொடுத்து விட்டு தியாகம் செய்துவிட்டு, மனைவி என்ற பெயரில் நுழைகின்ற, வலது காலடிவைத்து வீட்டுக்குள் வருகின்ற பெண்ணுக்கு.'தன் கணவனால் பரிபூரண அன்புடன் விருப்பத்துடன்தான், ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறோம் என்ற எண்ணம் மனதில் ஏற்படுவது போல கணவன் நடந்து கொள்ள வேண்டும்.

கணவனைப் போலவே, கணவனது தாயும் தந்தையும், குடும்பத்தாரும், அந்தப் பெண்ணை அந்தரங்க சுத்தியுடன் தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டது போலவே ஆதரவு தந்து நடந்துகொள்ள வேண்டும்.

நாங்கள் இப்பொழுது உன்னை இனிமையாக ஏற்றுக்கொண்டோம். தொடர்ந்தும் இதுபோலவே, எல்லோரும் இருப்போம் என்று நடைமுறையில் காட்டவிருக்கும் கடமையை கணவனே ஏற்றுக்கொண்டு, எந்தவிதக் குறைவுமில்லாமல் செய்யவேண்டும்.

அந்தக் கடமை எவ்வாறிருக்கும் என்பதைக் கொஞ்சம் விளக்கிச் சொன்னால் நன்றாக இருக்கும்?

கணவன் வீட்டில் புதிதாக வந்திருப்பதால், என்ன செய்வதென்றே மனைவி புரியாமல் தடுமாறுவாள். எந்தெந்தக் காரியங்கள் இங்கு வழக்கமாக நடக்கும்?எப்படிச் செய்தால் இந்த வீட்டில் உள்ளவர்களுக்குப் பிடிக்கும்? எப்பொழுது எதைச் செய்ய வேண்டும் என்பன போன்ற முக்கியமான வீட்டுக் காரியங்களை மனைவிக்குப் பயம் ஊட்டாமல் பக்குவமாக, மனதில் படும்படி