பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி



பதமாகவே,சொல்லித் தரவேண்டியது, கணவன் கடமையாகும். உதாரணத்திற்குக் கூறினேன், அவ்வப்போது தேவையானதெல்லாம் கணவனே அறிவித்தால் நல்லது.

மனைவி செயல்படும்பொழுது, தவறு நேரலாம், குறைகள் நிகழலாம், மீறி சேதமும் விளையலாம். அதையெல்லாம் இயற்கைதான் என்று மேம்போக்காகச் சொல்லிவிட்டு, தள்ளிவிட்டு, தவறுகள் மீண்டும் நேராவண்ணம் மனைவியை ஊக்குவிக்க வேண்டும்.

மனைவியின் திறமையை புகழ்வதன்மூலம். மேலும் குடும்பக்காரியங்களில் ஒருவித பிடிப்பு ஏற்படும்படியும், நடப்புக்காரியங்களில் நலமாக ஈடுபடும்படியும் மேலும் துண்டமுடியும்.

மனைவியின் தவறுகளைக் குத்திக் காட்டுவதும், உடனே கோபித்துக்கொண்டு குதிப்பதும், கொடுமையான வார்த்தைகளைக் கொட்டுவதும், மனைவியின் மனதைப் புண்படுத்துவதும். தேநீர் குடிக்கும்போது நாக்கு சுட்டுக்கொண்டால் குளிர்ந்த பானம் குடிக்கும் போது கூட ஊதி ஊதித்தான் குடிக்கத்தோன்றும் என்பது போல, கோபமுள்ள கணவனிடம், மனைவி பயந்தே காரியங்களைச் செய்வாள், அந்தப் பதட்டத்தால், மீண்டும் தவறுகள் அதிகம் நேரிடுமே தவிர குறையாது.

எனவே மனைவிக்குத்தைரியம் தந்து, பழக்குவது கணவன் கடமையாகும். கண்போன்று அமைவதால்தான் 'கணவன்' எனப்படுகிறான் என்பார்கள். துணையாக இருப்பதால்தான் துணைவன் என்றும் ஆகிறான். நான் துணைவருவேன் ஒன்று ஒருவன் மனதுக்குள்ளேயே நினைத்துக் கொண்டிருப்பதனால் மட்டுமே, அந்தப் பெண்ணுக்கு தைரியம் வந்துவிடாது. ஆகவே, மனைவியின்