பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
மெய்ப்பு பார்க்கும் பொழுது ஏதோ ஒரு பிரச்சனை


டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா

-

மனநிலைக்கேற்ப, ஒரு சில நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்து DL-D@l கொள்வது மிகமிக நலம் பயக்கும்.

ஒருசில நிகழ்ச்சிகள் என்றால்? இருவரும் முதன் முதலாக சந்தித்த நாளை, நினைவுப்படுத்திப் பேசுவது சந்தித்த வேளையில் பேசிக் கொண்டதை ஞாபகம் வைத்து உரையாடுவது! இருவருக்கும் திருமண நாள் இதுபோன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் ஏதாவது ஒரு பரிசினைத் தந்து அல்லது கொண்டாடி மகிழ்வது.

இவ்வாறு மனைவியை திகைப்பூட்டித் திருப்தி செய்யும் பொழுது, இன்னும் ஒன்றை ஆண் நன்றாக நினைவூட்டிக் கொள்ள வேண்டும்.

தன் தாயின் குணநலன்களைப் பற்றியும், கொள்கை பற்றியும் தன் மனைவிக்கு அறிவூட்டி, அவைகளுக்கேற்ப நடந்து கொள்ளுமாறு குறியிட்டுக் காட்டுவதுடன், மாமியாருக்கும் மருமகளுக்கும் சுமுகமான உறவு வர, சுலபமான வழிகளைக் கூறவும், கணவன் முயலவேண்டும். இருவருக்கும் ஒரு பாலமாக இருப்பது நல்லது. அதனால் இருவரின் மகிழ்ச்சியான வாழ்வுக்கும் வழியமைத்த பணியைத் திறம்பட மேற்கொண்டவனாகிறான்.

இன்னும் ஒருசில குடும்பத்தில், குடியிருக்கும் இடம் சிறிதாகவும், இருப்பவர்கள் அதிகமாகவும் இருக்க, கணவனும் மனைவியும், நேருக்கு நேர் நின்று பேசிக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கூட கிடைக்காத சூழ்நிலையும் அமைந்திருக்கும். அதே சமயத்தில், கணவனும் மனைவியும் கூடிப்பேசி, சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற கட்டுக்கடங்கா ஆசையும் கரை கடந்திருக்கும்.

அத்தகைய சூழ்நிலையில், தன் மனைவியின் அந்தரங்க ஆசைகளையும் உணர்வுகளையும் பரிமாறிக்