பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி



பொறுப்பேற்றுக் கொண்டு, சந்தர்ப்பங்களை உண்டுபண்ணித் தரவேண்டும்.

மேலே கூறியவற்றை கணவனுக்குரிய கடமையும் பொறுப்பும் என்று நீ உணர்ந்து கொண்டாலும், இன்னும் சில கருத்துக்களைக் கூறுகிறேன்.

கணவன் மனைவியின் கண்களுக்கு எப்பொழுதும் கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும். அந்தக் கவர்ச்சிக்காக எங்கே போவது என்று கேட்க வேண்டியதில்லை. இருக்கும் ஆடைகளில் சுத்தமானதாக இருப்பதை எப்பொழுதும் அணிந்து கொள்ள வேண்டும்.

கம்பீரமாக நிற்பது, நடப்பது, சிரிப்புடன் செழிப்புடன் வீட்டில் உலா வருவது போன்ற காரியங்கள் மனைவியின் மனதைக் கவர்வனவாகும்.

இவ்வாறு மனைவியின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, நம்முடைய வசதிக்கேற்ப அவளைத் திருப்பிவிட்டு விட்டால், வாழ்வில் நிச்சயம் மகிழ்ச்சியே நிலவும்.

மேலே கூறிய கருத்துக்களுக்கு அப்பாலும், பல சந்தர்ப்பசூழ்நிலைகள் ஏற்படலாம். அவ்வப்போது ஏற்படும் நிலைமைக்கு ஏற்ப, எதையும் அறிவுபூர்வமாகவே அணுகி, சமாளிக்க வேண்டியது தான் முறையாகும் . உணர்ச்சிபூர்வமாக பிரச்சினையை அணுகுவது தவறாகும். உடலாலும் உணர்வாலும் மனைவியிடம் அணுகி மகிழ்வுடன் வாழும் முறைகளைப் புரிந்து கொண்டது போலவே, சமூக அந்தஸ்து நிலையில் அவளுடன் வாழும் வகைகளையும் தெரிந்து கொள்ளலாம். சமூக நிலை

மனைவிக்கென்று அந்தஸ்து உண்டா? எந்த