பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

77



கொடுத்தால், மடம் பிடுங்குவாள் என்று பழமொழி இருக்கிறதே?...

கணவனுக்கு கட்டுப்பட்டு, மனைவி வாழவேண்டி வந்தவள் என்றாலும், மனைவிக்கும் உணர்ச்சிகள், ஆசைகள், மனப்பூர்வமான விருப்பங்கள் உண்டு என்பதை உனக்கு முன்னரே கூறியிருக்கிறேன். அதைத்தான், பெண்ணுக்கு ஆசாபாசங்கள் உண்டு, மானாபிமானங்கள் உண்டு என்பதுடன், ஆறறிவுள்ள அருமையான புனிதப் பிறவி என்றும் கணவன் உணர்வதில்தான், குடும்ப வாழ்க்கையின் அடித்தளமே அடங்கிக்கிடக்கிறது,

அந்தரங்கத்தில் எவ்வளவு அந்நியோன்னியமாக தம்பதிகள் வாழ்ந்தாலும், சுற்றுப்புற சூழ்நிலையில், சமுதாயத்தின் முன்னிலையில் மனைவிக்கென்று ஒரு அந்தஸ்தை, கணவன் நிச்சயமாகத் தரவேண்டும்.

அந்த அந்தஸ்தானது, மற்றவர்கள் முன்னிலையில் அவளுக்கென்று தகுதியான ஒரு நிலையினை அமைத்துத் தருவதாக இருப்பதுதான் முறையாகும்.

மனைவி பெறுகின்ற மதிப்பும் மரியாதையும், பெருமையும் புகழும் கணவனையே சாரும் என்பதால், மனைவியை மற்றவர்கள் முன்னிலையில் கெளரவமாக நடத்த வேண்டும் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நினைத்துப் பார்த்துக் கொள்வது நல்லது.

மற்றவர்கள் முன்னிலையில் கடுரமான வார்த்தைகளைப் பேசுவதும், கேலியும் கிண்டலும் செய்து கேவலப்படுத்துவதும் , அலட்சியமாகப் பேசி அவமானப்படுத்துவதும் மன்னிக்க முடியாத தவறாகும். இது போன்ற தவறுகளை கணவன்மார்கள் கட்டாயம் தவிர்க்கவேண்டும்.