பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி



ஏன் இப்படி கூறுகிறேன் என்றால், மற்றவர்கள் முன்னிலையில் மனைவியின் தரம் குறைந்து போகும்பொழுது கணவன் மனைவி இருவரது மதிப்பும் தானே பாழாகிறது? அதை நினைத்துப் பார்க்க வேண்டாமா? இன்னும் சிலர் இருக்கிறாள்கள். மனைவியின் சாதாரண தவற்றைக்கூட மற்றவர்களிடம் போய் விமர்சிப்பது. விமர்சனம்செய்வதுமட்டுமல்லாமல், அவர்கள் முன்னாலேயே கண்டிப்பதும், தண்டிப்பதும், திட்டுவதும் அடிப்பதுமாக, தங்கள் கோபத்தைத் தீர்த்துக் கொள்வார்கள். இதை மிருகத்தனமான ஆடவர் நடத்தை என்று பெரியோர்கள் கூறுகின்றார்கள்.

மனைவியின் தவறுகளைத் தனியான இடத்திலே வைத்து தகுந்த முறையில் அறிவுரை கூறி, திருத்தமுயல்வதே தரமுள்ளவர்களின் பண்பாகும்.

குற்றம் கடுமையாக இருந்தால் கூட தண்டிக்கக் கூடாதா?

சிறுதவறென்றால் பெரிதுபடுத்தாது விட்டு விடலாம். இல்லையென்றால், அன்புடன் அறிவுரை கூறலாம். எதையும் அதிக விவாதத்திற்குக் கொண்டு வந்தால், வாக்குவாதம் எல்லை மீறிப்போய், அதுவே புதிய தொல்லையாகப் படமெடுத்து ஆடுமே? துயரத்தைப் போக்க வாதத்தைத் தொடங்கி, அந்தத் துயரத்தைப் பெரிதாக்கிக் கொண்டு, அதற்குள்ளே புதைந்து போவது அறிவுடையோர்க்கு அழகாகுமா?

கடுமையான குற்றம் என்று கணவன் கருதினால், கட்டாயம் தண்டித்துத்தான் ஆக வேண்டும் என்றால், அதுவே சரியான செயல்முறை என்றால், தண்டித்தால்தான் தன் மனம் சாந்தியடையும் என்று கணவன் முடிவெடுத்தால், அதற்காக எவ்வாறு தண்டிக்க முடியுமோ, அதைத்தான்