பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

79



செய்ய வேண்டும்! அக்கம்பக்கம் உள்ளவர்கள் என்ன ஏது என்று கேட்டு, வீட்டிற்குள் வந்து, விசாரிக்கின்ற அளவுக்குப் போனால், அது விரசத்திலும் விரசமாகத் தோன்றாதா?

மறைமுகமாக செயல்படுவதுதான் முறை, எந்த சண்டையும் கணவன் மனைவிக்குள் இருப்பதுதான், அவர்களது பெருமையை உயர்த்தும். மீறி வெளியே வந்து பரவி விட்டால் அது இருவருக்குமே தீராத அவமானம் அல்லவா?

கோபம் வரும்பொழுது கொஞ்ச நேரம் ஒதுங்கி வந்தால், ஆத்திரம் மறையும். ஆத்திரம் மறைய மறைய, அறிவு செயல்படத் தொடங்கும். நிதான நிலை வந்ததும், என்ன செய்ய வேண்டும் என்ற நினைவும் துலங்கும். ஆகவே, எப்பொழுதும் பொறுமையுடன் பிரச்சினையை அணுகவே பழகிக்கொள்ளுதல் வேண்டும்.

மனைவியைத் தண்டிக்காமல் விட்டுவிடவேண்டும் என் கிறீர்கள்! பிரச்சினையை பேசியே தீர்த்துக் கொள்ளவேண்டும் என்கிறீர்களா?

குழந்தையென்றால் அடித்துத் திருத்தி விடலாம். வளர்ந்து விட்டவள் அல்லவா மனைவி அறிவுரை கூறி திருத்த முயல வேண்டுமே தவிர, தீர்மானமாகத் தண்டித்தால் தான் அறிவு வரும் என்பது இயற்கைக்கு முரணானதாகும். அடித்துப் பணிய வைக்கப்போய், அதுவே இரண்டு மடங்காக, இடக்காக ஏற்பட்டுப்போனால் என்ன செய்வது? மனைவியின் தவறை உணர்ந்து கொள்ளச் செய்ய வேண்டும். மீண்டும் அந்தத் தவறினை செய்யாத அளவுக்கு 'பக்குவப்படுத்த வேண்டும். அன்புதான் அனைத்துக்கும்