பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனைவியுடன் மகிழசசயாக வாழவது எபபடி

வாழ்க்கையை வளமாக வாழ்வதற்கு என்று ஒரு சில அடிப்படையான தேவைகள் உண்டு, அடிப்படை தேவை என்பது உடற்பசிக்கும், வயிற்றுப் பசிக்கும், நாகரிகப் பசிக்கும் பொருந்தும்.

தம்பதிகளுக்குள்ளே பெறும் இனிய, உடல் உறவுகள்; அதற்குப்பிறகு பெறுகின்ற வயிற்றுப் பசிக்குத் தேவையான சுவையான உணவு வகைகள்; அத்தனைக்கும் ஈடாக, மற்ற வரிடையே மதிப்புடன் வாழ உடை, உறையுள், அணிகலன்கள் போன்றவற்றிற்கான பொருளாதார வசதிகள், இவை எல்லாம் நிறைவாகக் கிடைக்கவேண்டும் என்றே எல்லோரும் ஆசைப்படுகின்றனர்.

நிறைய கிடைக்கும்பொழுதுதான் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். நடைமுறையில் இவை கிடைக்காத பொழுது, வாழ்க்கைக் கசந்து போவது உண்மைதான்.

இன்னும் கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன்.

உடலுறவு கொள்ளும்போது இப்படி இருக்கலாம். அப்படி சிரிக்கலாம் என்றெல்லாம் திருமணத்திற்குமுன் இமாலயக் கனவு கண்டு, தேனிலவுக் காட்சிகளையெல்லாம் கற்பனை செய்து மனதில் ஏற்றுக்கொண்டு, பின்னர் செயல்முறையில் இருவரும் இறங்கும்பொழுது, எதிர்பார்த்த இனிய சுகநிலை கிடைக் காது போனால், இன்ப உணர்ச்சியின், தேகக்கிளர்ச்சியின் உச்சநிலையினை எட்ட முடியாத நிலையில் சறுக்கி விழுந்தால், அடிக்கடி அந்த நிலைக்கு ஆளாகும் ஆண் பெண் இருவருக்கும் சண்டை வரத்தானே செய்யும்.

பொருளாதாரநிலை

வாழ்க்கை கசந்து போவதற்கு உடலுறவு மட்டுமே ஆதாரம் என்கிறீர்கள் இல்லையா!