பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7
 

இளைஞர்கள் எல்லோரும் ஒரு நாள் இல்லறத்தில் ஈடுபடுவது இயற்கைதான். அது தான் இனிமையான வாழ்க்கையுங் கூட.

அத்தகைய ஆள்வத்தில் அலைபாய்ந்து நடக்கும் இளைஞர்கள், எத்தனையோ கனவுகளில் இலயித்துக் கிடந்தாலும், இடையிடையே குழப்பங்களிலும், குதர்க்கவாதங்களிலும் குமுறி எழுந்து, குன்றிப் போயும் கிடக்கின்றார்கள்.

என்னை அணுகிய இளைஞர்களுக்கும், மணமான நண்பர்களுக்கும், உடற்கல்வித் துறையில், பயிற்சித் துறையில் மனம் ஒன்றி ஈடுபட்டவன் என்ற முறையில், பல வினாக்களுக்கு விடையளித்து, சந்தேகங்களைத் தீர்த்தது மட்டுமன்றி, சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தேறி வெளியேற்றும் பல யுக்திகளையும் கூறினேன்.

அந்த கருத்துக்களின் தொகுப்புதான் இந்நூலாகும். இந்நூலைப் படிக்கும் அன்பர்கள், வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ்வதற்கே என்ற தத்துவத்திற்கேற்ப, வழிகாட்டும் நூல் என்றே ஒப்புக் கொள்வார்.

ஒருவருக் கொருவர் துணையாக மனைவியும் கணவனும் இருக்கிறார்கள். வாழ்கின்றார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டுமானால் எப்படி என்ற ஓர் கேள்விக்கு விடையாகத்தான் இந்த நூலை உருவாக்கி இருக்கிறேன்.

மகிழ்ச்சியாகத் தொடர இனிய நடையில் நூலை எழுதி இருக்கிறேன். மகிழ்ச்சியாக வாழ கருத்துக்களைத் தொகுத்து இருக்கிறேன். மகிழ்ச் சியாக வாழ வாழ்த்துகிறேன்.

ஞானமலர் இல்லம்

சென்னை-17. எஸ். நவராஜ் செல்லையா