பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
89
 


-

உடுத்திக் கொள்கின்ற ஆடையில் அழுக்கு படிந்து விட்டால், அதனை சுத்தப்படுத்திட துவைக்கிறோம்; அதுபோல, மன அழுக்கைப் போக்கும் வேலையாக இந்த சிறு பூசலை மதிக்கவேண்டும். ஆடை அழுக்கானால், அதைக் கிழித்து எறிவேன் என்று ஒருவர் முரண்டு பிடித்தால், அவரை எப்படி அழைப்பது?

குழப்பத்தை உண்டு பண்ணக்கூடிய விஷயம் எதுவும் வந்தால், அதனைக் காரசாரமாக விவாதிக்க மனைவி இடம் தரவே கூடாது. அதனை ஆறப் போடுகின்ற பொறுப்பை மனைவியே ஏற்க வேண்டும். பிரச்சினை பெரிதாகாமல் சூடாகாமல் மனைவி பாாத்துக் கொண்டால், கோபம் அடங்கியவுடன், தவறு யார் மேல் என்று தெளிவாகத் தெரியும். -

வந்த தகராறில், தன்பக்கமே ஜெயித்தது என்று தம்பதிகளில் யாராவது ஒருவர் சுட்டிக் காட்டுவதோ, அடுத்தவரைக் குத்திக் காட்டுவதோ கூடாது. அந்தப் பழக்கம் இருந்தால், அறவே ஒழித்து விட வேண்டும். இல்லையென்றால் தோற்றவர் தன் தன்மானத்தைக் காப்பாற்றுவதற்காக, மீண்டும் வேறு ஒரு பிரச்சினையைக் கிளப்ப வேண்டியிருக்கும்.

தன்பக்கம் தவறிருந்தால், கணவனோ, அல்லது மனைவியோ தைரியமாக தன் தவறினை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பெற்றுக் கொள்ள வேண்டும். வீண் கெளரவம் பார் க் காது, வாழ் க் கையை இனிமையாக கி கொள்வதற்காகவாவது, தவறை ஏற்றுக்கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்.

இதில் முக்கிய குறிப்பு என்னவென்றால், கணவன் 'னைவி இருவருக்கும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை