பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி



விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையானது, தான் என்ற அகங்காரம் இல்லாதபோது தான் வரும்.

"இது நம் குடும்பம், இவர் என் கணவர், இவர் நிம்மதியாக இருந்தால்தான் என் வாழ்வும் இன்பமாக இருக்கும்," என்ற எண்ணத்துடன் மனைவி இணைந்து இசைந்து நடக்க வேண்டும்.

கணவன் சில சமயங்களில் பெருமைக்காக செலவு செய்வதும், தன்னைப்பற்றியே பெருமையாகப் பேசி மகிழ்வதும் உண்டு. பிறர் முன்னிலையில் மனைவி அவரைத் திருத்த முயல்வதும், கண்டிக்க முயல்வதும் தவறாகும். தனிமையில் இருக்கும்பொழுதுதான், சமாதான முறையில் குறைகளை களையுமாறு அவள் மனதில் படும்படி கேட்கவேண்டும்.

அன்றாட வாழ்க்கை முறையில், கணவன் செய்வது மனைவிக்கும், மனைவி செய்வது கணவனுக்கும் பிடிக்காமற் போகலாம். அதனைத் தீர்ப்பதற்காக அடுத்தவர்கள் உதவியை நாடக்கூடாது. குற்றம் சாட்டக்கூடாது.

இருவரும் மகிழ்ச்சியாக இருக்கும் நேரம் வருமல்லவா! அப்பொழுது தங்களுடைய எண்ணத்தைக்கூறி, தேவையான பழக்கத்தை மேற்கொள்ள பரஸ்பரம் இருவரும் கருத்தைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். எதையும் கேட்கும் முறையில் கேட்டால், நிச்சயம் கொடுக்கப்படும் என்பது இறைமொழியல்லவா!

குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்துவதுதான் தன் கடமை என்பதைத் தெரிந்து மனைவி நடந்து கொள்ளவேண்டும்.