பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி



இடத்தைப் பிடித்துக்கொள்வது போலவே, உறுதுணையாக வாழவேண்டும்.

சிறுசிறு சச்சரவு வந்தாள் முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும். நீரோடு நீர் மோதுவதால் என்ன ஆகிவிடும். கணவன் மனைவி உறவு கீழே விழுந்தால் உடையும் மட்குடம் அல்ல. தப்பிக்கொள்ளும் தங்கக்குடம். குறைபார்த்துக் கோபித்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது! எந்தப்பொருளுக்கும் குறை உண்டு. நீருக்கு நுரையுண்டு. நெல்லுக்கு உமியுண்டு. நிலவுக்கும் கறையுண்டு. பூவுக்கும் புல்லிதழ் உண்டு என்று பழம்பாடல் கூறுவதுபோல், மனிதர்களுக்கும் குறை உண்டு.

ஆகவே, குறையைப் பெரிதுபடுத்தாது, அனுசரித்து வாழ்வதே ஆனந்த மயமான வாழ்க்கையாகும்.

இவ்வாறு நடந்து கொள்வது, மனப்பக்குவம் பெறுவது மிகவும் கடினம் என்கிறார்களே?

'மனைவி தனக்கு அடிமை போன்றவள். தான் இடும் வேலைகளைச் செய்பவள்: என்னைக் காப்பதுதான் அவளுக்குத் தலையாய கடமை என்று எந்தக் கணவனாவது நினைத்தால், அங்குதான் சிக்கலே எழுகின்றது.

எவன் தன்னுடைய மனைவியை ஒரு நண்பனாக, நல்ல தோழனாக கருதுகிறானோ, அவனே மகிழ்ச்சியாக வாழ்கிறான். நல்ல நண்பன் நாலாயிரங்கோடிக்குச் சமம் என்கிறார்களே! உயிர் காப்பான் தோழன் என்பது தானே பழமொழி.

தனது வாழ்க்கைப் பயணத்திற்குத் தொடர்ந்துவரும் துணையென்று மனைவியை ஏற்றுக் கொண்டால்,