பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
95
 


வாசுவைப் போன்ற வாலிபர்கள், நாட்டிலேயே நிறையபேர்கள் இருக்கின்றனர். இதயத்திலே எழுகின்ற சந்தேகங்களை யாரிடம் கேட்பது, எங்ங்னம் தெளிவுபடுத்திக் கொள்வது, என்றெல்லாம் மன உளைச்சலில் ஊறியவர்கள் அநேகம், அநேகம்.

கேட்கக் கூடாதவர்களிடம் கேள்விகளைக் கேட்டு, கிடைக்கத் தகாத பதில்களை கிடைக்கப்பெற்று, கிளர்ச்சி பெற்று, கீழான செயல்களில் ஈடுபட்டு கேடுற்றவர்களும் நிறைய பேர்கள் உண்டு.

'சொல்லித் தெளிவதோ சுந்தரக்கலை என்று உடல் உறவுக் கலையை விவரிப்பார்கள். நாம் இங்கே அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. சொல்லித் தெரியாமல், நாளாக, நாளாக மேற்கொள்ளும் பழக்க வழக்கங்களில் கண்டு, மாறி, மாற்றிக் கொண்டு, தெளிவும் பொலிவும் பெற வேண்டும் என்பதே நமது ஆசை.

அதற்கும் மேலே, மனைவியுடன் சேர்ந்து வாழ்வது, மகிழ்ந்து வாழ்வது எவ்வாறு என்பது தான் அடுத்து நிற்கும்

தலையாயப் பிரச்சினை. அதனைத்தான் அதிகமாகத் தெளிவுபடுத்த முனைந்தோம்.

வாலிப நண பர் கள் , வாழ் க் கை யரின்

முக்கியத்துவத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வந்து சேருகின்ற மனைவியின் லட்சியத்தை,

ஆசைகளை, மனோபாவங்களை, செயல்முறைகளை

நோக்கித் தெரிந்து கொள்ளவேண்டும்.