பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
96
மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி
 


நமது வாழ்க்கை வசதி என்ன? அதற்கேற்றாற் போல வாழ்க்கை முறையினை அமைத்துக்கொள்ள முடிவு செய்திடவேண்டும்.

வரவு என்ன செலவு என்ன என்பதைவிட, எல்லா செயலிலும் நிலையிலும் இருவரின் பங்கு என்ன என்பது தான் மிகவும் முக்கியம்.

உள்ளத்தால் ஈடுபாடு கொண்டு, உடலால் நல்லுறவு கண்டு, பொருளாதாரத்தால் மேன்மை நிலை கொண்டு, சமூகத்தில் சகலமரியாதைகளையும் பெற்று வாழ இன்றைய இளைஞர்கள், இல்லறத்தின் மூலமாக முயலவேண்டும். முடித்திட வேண்டும். மகிழ்ந்திடவேண்டும். மாபெரும் பணியில் திகழ்ந்திடவேண்டும். வெற்றி வாழ்க்கையை வாழ்ந்திடவேண்டும் என்று விரும்பி வாழ்த்துகிறோம்.

که به ۱ که به اه