பக்கம்:மனை ஆட்சி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

10

 10 அவர்கள் ஏதோ இம்மாத்துண்டு கொடுத்ததை சாப் பிட்டேன். அதன்பிறகு ஒருதுளி பருக்கைகூடகிட்ட வில்லை. குழாய் ஜலத்தை குடித்துக்கொண்டு எத்தனை நாள் உயிருடனிருக்கக்கூடும் ?

தா. (காலை உதைத்துக் கொண்டு) கட்டாயமாய் !-கட்டா யமாய் -இதற்கு ஒரு முடிவு இருக்கவேண்டும் ! இன்றைக்கெல்லாம் அவர்கள் ஒன்றுமே சாப்பிட வில்லையென்று சொல்ல வருகிறாய் என்னிடம் ?


க. இல்லவே இல்லைங்க குழாயிலிருந்து ஒரு துளி தண்ணிகூட அவுங்க குடிக்கலெ !

தா. அவர்கள் எப்பொழுதும் இப்படியே நடக்கப்போகி றார்களென்று சொல்கிறாயா ?


க. எசமானுக்குத் தெரியும் எல்லாம்-ஒரு சமயம் அதிக காலமிருக்க முடியாது -இன்னைக்கி ராத்திரிக்கே எல்லாம் தீர்ந்து போயிடுமின்னு நினைக்கிறேன்.


தா. என்ன-என்ன !-அவர்கள் - இன்றிரவு-எல்லாம் -இறந்துபோய் விடுவார்களென்று சொல்கிறாயா ?


க. எசமான், ஒரு நிமிஷம்கூட இங்கே இருக்க எனக்கு இஷ்ட மில்லெ-எனக்கு பயமா யிருக்குது-பதி னைஞ்சி வர்ஷம் எசமானிடத்திலெ துரோகம் பண் ணாமெ வேலெ பார்த்து வந்தேன்-அத்தொட்டு, எசமான்கிட்ட சொல்லிட்டு உத்தரவு பெத்துகாமெ போவ எனக்கு இஷ்டமில்லெ-எனக்கு போவ உத்தரவு கொடுங்க-நான் எங்கேயாவது போயி பிச்செ எடுத்து பொழைச்சிகிறேன்.


தா. இதோ பார்-கணபதி-இது சரியா ?- இது நியாயமா ? சரியாக இந்த சமயத்தில் நீயும் என்னைக் கைவிட்டுப் போகலாமா ?


க. எம்பொஞ்சாதி புள்ளைங்கல்லாம் நாட்டுப்பொறத்துலெ இருக்கும்போது நானா இங்கே செத்து போது சரியா ? நியாயமா ? .

தா. நீ சாகமாட்டாய், அந்த மாதிரி ஒன்றும் நடக்காது. இந்தா இந்த பணத்தெ எடுத்துக்கொண்டு, ஹோட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனை_ஆட்சி.pdf/14&oldid=1413297" இலிருந்து மீள்விக்கப்பட்டது