பக்கம்:மனை ஆட்சி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

11

 11 லுக்குப்போய் நன்றாக சாப்பிட்டுவிட்டு, திரும்பி வரும் போது எனக்கு ஏதாவது சாப்பிடக் கொண்டுவா.


க. ஐயையோ -அந்த பணத்தெ நான் தொடமாட் டேன் உள்ளே இருக்கிறவங்களுக்கு இது தெரிஞ்சா எங்கதி என்னமாகுமோ எனக்குத் தெரியாது.இந்த நிமிஷமே நான் செத்துபூடவேண்டி வந்தாலும் வரும். (உள்ளே கிளு கிளு என்று அடக்கப்பட்ட சிரிப்பு சப்தம் கேட்கிறது)


தா. யார் அங்கே சிரிப்பது ?


க. சிரிப்பா ? யார் சிரிப்பாங்க ? அவுங்க இரும்பராப் போலெ இருக்குது.


தா. சரி !-நான் என்ன செய்வதென்று எனக்கு வாஸ்த வமாய்த் தெரியவில்லை-எல்லாம் ஒரே குழப்பமா யிருக்கிறது என் மனதில். (மிஸ் மோஹர் வருகிறாள்) சரி, கணபதி, நீ போகலாம் உள்ளே இப்பொழுது -அப்புறம் உன்னை பார்க்கிறேன்.


க. அது வரையில்-நான் உயிரோடிருந்தா!

(மிகுந்த கஷ்டத்துடன் நடப்பதுபோல் பாசாங்கு செய்கிறான். அவர் பார்வைக்கு அப்பால் போனவுடன், திரும்பி நங்கு காட்டிவிட்டு, கேலி பண்ணிக் கொண் டு போகிறான்)


மோ. க்ஷேமம் தானே சாஸ்திரியார் -நான் வருவேன் என்று எதிர் பார்க்கவில்லை என்று ஒப்புக்கொள் ளுங்கள். ஏதோ மிகுந்த மன வருத்தத்துடன் இருக்கி றாற் போலிருக்கிறதே, என்ன காரணம்?-என்ன சமாசாரம் ?


தா. நாளை காலைதான் வரமுடியும், என்று நீ சொன்ன போது, இப்பொழுது நீ வருவாய் என்று நான் எதிர் பார்த்தேன், என்று நான் எப்படி சொல்லக்கூடும் ? -முடிவாக என்ன தீர்மானம் செய்தாய் ?-என்ன செய்தாய்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனை_ஆட்சி.pdf/15&oldid=1413298" இலிருந்து மீள்விக்கப்பட்டது