பக்கம்:மனை ஆட்சி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

12

 12 மோ. நேற்றுகாலை உங்களைப் பார்த்தபோது, அந்த வேலை எனக்கு வேண்டாம் என்று ஏறக்குறைய தீர்மானிக் கும்படிச் செய்தீர்கள் நீங்கள்-மாசம் ஐந்நூறு ரூபாய் சம்பளம், குடிக்கூலியில்லாத ஜாகை, இவை களை யெல்லாம் வேண்டாம் என்று வெறுப்பது சுலப மான காரியமாக இல்லாவிட்டாலும் !-என் சகோதர னுக்கு, அந்த கெயிக்வார் என்றால் கடுவிஷம்போல் கொஞ்சமும் ஆகாது என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே. நான் அந்த வேலையை ஒப்புக் கொள்வது என்மனதிற்கு கொஞ்சமேனும் சம்மதமில்லையென்று கூறினான். அந்த வார்த்தை என்னை தீர்மானிக்கச் செய்தது. நான் வேண்டாம் என்று எழுதி விட்டேன் -உடனே.


தா. மிகவும் சந்தோஷம் எனக்கு !


மோ. நான் சொல்வதை முற்றிலும் கேட்டால், அப்படி உமக்கிராதென்று நினைக்கிறேன். இன்று காலை எனக்கு ஒரு கடிதம் கிடைத்தது-அதைப் பார்த்த பிறகு எல்லா விஷயங்களும்-வேறு மாதிரியாகத் தோற்றத் தலைப்பட்டன. -


தா. கெய்க்வார் இன்னும் அதிக சம்பளம் முதலியன கொடுப்பதாக எழுதினாரோ ? உன்னை அங்கே வர, ஒப்புக்கொள்ளச் செய்வதற்காக ?


மோ. இன்னும் அப்படி எழுதவில்லை-அப்படிப் பட்ட பெரிய காரியத்தைச் செய்வதற்கு இன்னும் அவருக்கு அவகாசம் கிடைக்கவில்லை போலும்


தா. ஆனால்-பிறகு என்ன?


மோ. சாஸ்திரியார், கொஞ்சம் தயவு செய்து பொறுங்கள். நான் உங்களுக்கு எல்லாவற்றையும் சொல்கிறேன்.நான் உங்களை மறுபடியும் பார்க்கக்கூடுமோ என்றே சந்தேகப் பட்டேன்-நான் அதைப்பற்றி கவலை யுடன் எல்லாம் யோசித்துப் பார்த்தேன்-பிறகு


தா. எதைப்பற்றி இதெல்லாம் ?


மோ. கடைசியாக, எல்லா விஷயங்களையும் உம்மிடம் கூறி, நீங்களே எனக்காக முடிவு பண்ணுங்கள் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனை_ஆட்சி.pdf/16&oldid=1413299" இலிருந்து மீள்விக்கப்பட்டது