பக்கம்:மனை ஆட்சி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

13

 13 கேட்க வேண்டுமென்னும் தீர்மானத்திற்கு வந்தேன் -நீங்கள் நன்றாய்க் கற்றறிந்த சாஸ்திரியார்-அன் றியும் உலக அனுபவம் அதிகமாக உடையவர்


தா. ஆம்-ஆம்-அப்படித்தான் நானும் எண்ண வேண் டும் போலும்.-ஆயினும்-வாஸ்தவமாய் என்னிடம் என்ன சொல்ல வந்தாய் ?-இந்த பீடிகை யெல்லாம் எதற்காக ?


மோ. அவசரப்படாதீர்கள் சாஸ்திரியார். உங்களிடம் எல்லா வற்றையும் தெரிவித்து, நீங்களே முடிவாகத் தீர்மா னம் செய்யவேண்டுமென்று கேட்கவேண்டு மென்னும் உறுதியுடன் வந்திருக்கிறேன்.-உம்-இக் கடிதத் தைப் பாருங்கள்.-நீங்களே இதைப் படித்துக் கொள்ளுங்கள் -இன்று காலை எனக்கிது கிடைத்தது-இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? இதை எழுதியது யார் என்று எண்ணுகிறீர்கள் ?


தா. (அக்கடிதத்தை வாங்கிப் படித்துப் பார்க்கிறார். அப்ப டிச் செய்யும்போது அவர் முகம் மாறுகிறது ; கதவு களின் பக்கங்களிலிருந்தும், ஸ்கிரின்கள் பின்னாலி ருந்தும், முகங்கள் மறைவாக எட்டிப் பார்க்கின்றன) என்ன அவதூறு என்ன தூஷணம்! -உலகம் இக் கதிக்கும் வருமா ?-உலகில் ஒப்புயர்வில்லா உத்தமி -கற்பிற்கரசி!-ஏன் ? இது கையெழுத்தில்லாத -கடிதம்


மோ. அப்படித்தான்; அதனால்தான் அதன் விஷமம் கை யெழுத்து போடாத கடிதம் யாருடையதாக வேண்டுமானாலு மிருக்கலாம்-ஆனால் அது எல்லோருடைய தாகவு மாகிறது !


தா. அப்படியல்லவேயல்ல, கையெழுத்து போடாத கடிதம் இன்னாருடையது என்று நாம் சொல்ல முடியாது, ஆகவே ஒருவரும் எழுதவில்லை என்றபடியாம்.


மோ. அக்காகிதத்தை எழுதியது அல்லது எழுதி வைத்தது யாரோ-அனாமத் பேர்வழி யன்று-யாராக இருக்க வேண்டும் என்று உங்களால் அ னு மா னி க் க முடியாதா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனை_ஆட்சி.pdf/17&oldid=1413300" இலிருந்து மீள்விக்கப்பட்டது