பக்கம்:மனை ஆட்சி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

16

16 மோ. இப்படிப்பட்ட பல விஷயங்கள் சரிதான் நான் தெரிந்து கொள்ள விரும்பியதெல்லாம் அவ்வ ளவுதான். இப்பொழுது, சாஸ்திரியார், நான் உத்திரவு பெற்றுக் கொள்ளுகிறேன். நான் நாளை தினம் சென்னைக்குப் போகிறேன்; ஒருவேளை அங்கிருந்து பரோடாவுக்குப் போனாலும் போவேன்-யாருக்குத் தெரியும்? நாமிருவரும் மறுபடியும் சந்திப்போமோ என்னவோ ?-யார் நினைத்திருப்பார்கள் ? இப்படி -


தா. மிஸ் மோஹர் -

மோ. என்ன ?


தா. இது உண்மைதானா ?


மோ. இதுதான் உலகம்!


தா.ஐயோ அப்படியிருக்கக்கூடாது !

மோ. எல்லாப் பொருள்களிலும் அழகையும் நன்மையையும் காண்கின்ற ரசிகரான சாஸ்திரியாருக்கு, இப்படி யிருக்கக்கூடாது, ஒருவேளை


தா. சாஸ்திரங்கற்ற ரசிகனை-சாம்பலாக்கு !

மோ. (திடீரென்று, கிழிந்து கிடக்கின்ற ப ட க் தை க் கண்ணுற்று) -

அதிருக்கட்டும் -இது செய்ததுயார்? 

தா. உண்மையில் எனக்குத் தெரியாது -நான் இங்கு வந்தவுடன் இப்படி இருப்பதைக் கண்டேன்.


மோ. இது கெட்ட சகுனமாம், என்று நினைக்கிறேன். -இப்படி இருக்க வேண்டியதுதான் சரியோ, என்னவோ ?


தா. ஈசனே ஈசனே தயவுசெய்து இப்படி பேசாதே.

(குண்டு ராவ் வருகிறார்.)


கு. ஏனப்பா தாமு ! உன்னைப் பார்த்து ஒரு யுகமாச்சுதே -ஓ! மோஹர் அம்மா?-நலந்தானே?நான் இச்சமயம் வந்திருக்கலாகாது -தப்பிதம் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனை_ஆட்சி.pdf/20&oldid=1413699" இலிருந்து மீள்விக்கப்பட்டது