பக்கம்:மனை ஆட்சி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

17

 17 மோ. வாருங்கள் -மிஸ்டர் குண்டுராவ் எல்லாம் மிகவும் க்ஷேமங் தானே ?

கு. நிரம்ப நெரம்ப - கேட்டதற்காக வந்தனம்.

தா. உட்காருங்கள் குண்டுராவ். ஏதாவது வேலையாக வந்தீர்களா ?


கு. எனக்கென்ன வேலை யிருக்கிறது ? அகஸ்மாத்தாய் நான் இந்த வழியாகப்போய்க் கொண்டிருக்கும் போது, இங்கே உள்ளே நுழைந்து, உங்கள் மனைவி யும் பெண்ணும் எப்படி யி ரு க் கி றா ர் க ள் என்று, கேட்டுவிட்டுப் போகலாமென்று என்மனதில் பட்டது.

தா. என்ன ?-அவர்களுக்கென்ன ?


கு. இப்பொழுதுதான் கேள்விப்பட்டேன், அவர்கள் மிகவும் காயலா யிருப்பதாக -டாக்டரும் கைவிட்டு விட்டாராம்-அவர்கள் கடைசி காலம் - எ ன் ன கேடு கெட்ட உலகம் இது!

மோ . என்ன கேடுகெட்ட உலகம் இது !

கு. அவர்களுக்கு ஒன்றுமே யில்லையா ? -எனக்கு மிகவும் சந்தோஷம் :

தா. அப்படியல்ல -அவர்கள் வயிற்றில் ஏதோ கோளாறு இருக்கிறதென நினைக்கிறேன்.

மோ. வயிற்றிலா-கோளாறு -என்று கூறினார்கள் ?

கு. உலகத்திலுள்ள எல்லோருடைய வ யி ற் றி லு ம் கோளாறு இருக்கிறதென்பது நிச்சயம்.


மோ. அது எனக்குத் தெரியாது, நான் வயிற்றுக்கோளாறு களைப்பற்றி கற்றறிந்த வயித்தியனல்ல. ஆயினும் வயிறுகளைத் தவிர்த்து, இதர அவயவங்களிலும் கோளாறுகள் ஏற்படக்கூடுமென்று நினைக்கிறேன். -சரி-சாஸ்திரியார் நான் விடை பெற்றுக்கொள் கிறேன்.- நான் புறப்படவேண்டும் நிச்சயமாய்.

குண்டுராவ், உங்களுக்குத் தெரியுமா? மிஸ் மோஹர் நம்மையெல்லாம் விட்டுப்போவதாகச் சொல்கிறார்கள். -திருச்சூழியையே விட்டுப் போகிறார்களாம். 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனை_ஆட்சி.pdf/21&oldid=1413815" இலிருந்து மீள்விக்கப்பட்டது